திணை பாயாசம்

திணை பாயாசம்

தேவையான பொருட்கள் :

திணை அரிசி – 1/2 கப்

சிறு பருப்பு – 4 tbsp

வெல்லம் – 3/4 கப்

ஏலக்காய் – 1/2 tspஉப்பு – சிட்டிகை

தேங்காய் பால் – 1/2 கப்

தேங்காய் துருவியது – 1/2 கப்

நெய் – 1 tbsp

முந்திரி , திராட்சை – 10

செய்முறை :

திணை அரிசியை கடாயில் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். பின் குக்கரில் போட்டு அதோடு சிறு பருப்பும் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வர வேக வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக கிண்ணம் வைத்து வெல்லம் போட்டு தண்ணீர் ஊற்றி உருக்கிக் கொள்ளுங்கள்.

அரிசி வெந்ததும் அதில் உருக்கிய வெல்லத் தண்ணீரை ஊற்றி கிளறுங்கள். அதோடு தேங்காய் பால் மற்றும் தேங்காய் துருவல், ஏலக்காய் சேர்த்து கலந்து கொதிக்க வையுங்கள். 2 நிமிடங்களுக்கு கொதித்தால் போதும்.

அடுத்ததாக நெய் ஊற்றி முந்திரி திராட்சையை போட்டு வதக்குங்கள். அதை அப்படியே பாயாசத்தில் கொட்டி கலக்குங்கள்.

அவ்வளவுதான் திணை பாயாசம் தயார்.