நீரிழிவு நோயை தடுக்கும் நாவல்பழம்…
பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக்குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகைநோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்திசெய்யும்.
சிறுநீரகக் கற்கள் கரையவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரிசெய்யவும் நாவற்பழம் உதவுகிறது.
நீரிழிவு நோயை தடுக்கும் பழம், நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.
நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடுதடுக்கப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள், நாவல் பழத்தின் விதைகளைஇடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும்,மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டு வந்தால் சிறுநீர்ப்போக்குக் குறையும்.
பழச்சாற்றை தினமும் மூன்றுவேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.
நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் குழந்தைப் பேறுதரும்.
அதே போல, நாவல்மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவுசாப்பிட வேண்டும். காலை, மாலை என இரு வேளை 3 நாட்களுக்குதொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.
தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும்.
நாவல் பழத்திற்கு சிறுநீர் பெருக்கம், பசியை தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு.
நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு.