ஏன் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது ?
கார்த்திகை விளக்கு திருவிழா தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப வழிபாட்டிற்கு அகல் விளக்குகளே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த மாதம் முழுவதும் மாலை நேரத்தில் வீடுகளின் வாசலில் விளக்கேற்றி வழிபடுகின்றனர்.
கார்த்திகை தீபத்தின் முதல்நாள் ஏற்றப்படும் தீபம் பரணி தீபமாகும். இது முருகனுக்குரிய வழிபாடு.
மறுநாள் திருக்கார்த்திகை தீபம் சிவனுக்காக ஏற்றப்படுகிறது.
கார்த்திகை மாத வளர்பிறை கிருத்திகை நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
அன்று விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றி வழிபடுவதே முறையான வழிபாடாகும்.
மாலை மாவிளக்கு ஏற்றி அந்த விளக்கிற்கு பூஜை செய்து அதன்பிறகே உணவு உண்ண வேண்டும்.
கார்த்திகை அன்று பகலில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.
கார்த்திகை அன்று மாலையில் வீட்டிலிருக்கும் எல்லா திருவிளக்குகளையும் ஏற்ற வேண்டும். வாசலில் சிறு விளக்குகளை ஏற்றிவைக்க வேண்டும்.
இந்த தீபச்சுடர்கள் எங்கும் பிரகாசிப்பதைக் காணும்போது மகிழ்ச்சி பெருகுவதுடன் பக்தியும் சுரக்கும்.