உடலுக்கு ஆரோக்கியம் தரும் முருங்கைப்பூ பொரியல்
தேவையான பொருள்கள்:
புதிதாகப் பறித்த முருங்கைப்பூ – 1 கப்
வெங்காயம் – 2
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
தாளிக்க எண்ணெய், கடுகு – சிறிது
தேங்காய் துருவல் – கால் கப்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
- முருங்கைப்பூவை அலசிப் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
- காய்ந்த மிளகாயைக் கிள்ளி வைத்துக்கெள்ளவும்.
- வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.
- பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கியதும், முருங்கைப்பூவை போட்டு வதக்கவும்.
- வதங்கியதும் சிறிது தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும்.
- பூ நன்கு வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும் .