எலக்ட்ரிக் வாகன செய்திகள்: நாட்டில் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒரு ஸ்கூட்டரை வாங்கினால், அது எண்ணெய் (Petrol- Diesel) இல்லாமல் இயங்கும். மேலும் அதிக மைலேஜ் தரும். இது ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், விற்பனையை தொடங்கிய Pure EV நிறுவனம் தனது புதிய மின்சார ஸ்கூட்டர் மாடலான “ஈட்ரான்ஸ் பிளஸ்” (ETrance+) ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஷோரூம் விலை ரூ .56,999. ஆகும்.
இது ஒரு Startup நிறுவனம் மற்றும் இந்திய தொழில்நுட்ப ஹைதராபாத் (IIT-Hyderabad) இணைந்து உருவாக்கி உள்ளது. இதுக்குறித்து நிறுவனம் கூறுகையில், இது அதன் 5 வது தயாரிப்பு ஆகும். இது 1.25 கிலோவாட் போர்ட்டபிள் பேட்டரி கொண்டுள்ளது.
நடுத்தர வர்க்கத்தின் தேவைகளுக்கு ஏற்ப மின்சார வாகன தொடர்ந்து மேம்படுத்துவதாக Pure EV நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஹித் வதேரா தெரிவித்தார்.
கோவிட் 19 தொற்றுநோய்கள் பரவி வரும்வேளையில், பொதுமக்கள் பலர் தங்களுக்கு தனிப்பட்ட வாகனத்தை வாங்க விரும்புகிறார்கள். குறைந்த செலவில் மின்சார ஸ்கூட்டரை மக்கள் விரும்புகிறார்கள். தினசரி பயன்பாட்டிற்காக மின்சார வாகனங்களை வாங்க விரும்பும் பெரும்பாலான வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில், திருப்பூரின் வாகன நிறுவனமான சி.கே மோட்டார்ஸ் தனது மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்சார சைக்கிள்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனங்கள் லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
சி.கே மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகர் கூறுகையில், ஒருமுறை முழுசாக சார்ச் செய்தால் 50 கி.மீ வரை பயணிக்க முடியும். அதேபோல ஒருமுறை சார்ச் செய்வதன் மூலம் நிறுவனத்தின் மொபெட் ஒரு மணி நேரத்திற்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் 60 கிலோமீட்டர் வரை செல்ல முடியும்.
இதேபோல், வெவ்வேறு தூரம் வரை செல்லக்கூடிய மின்சார ஸ்கூட்டர்கள் உள்ளது. அதை ஒருமுறை சார்ச் செய்தால், ஒரு மணி நேரத்திற்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் 85 கிலோமீட்டர் வரை மற்றும் 65 KM வேகத்தில் ஒரு மணி நேரத்திற்கு 116 கிலோமீட்டர் வரையும் செல்லும். இந்த எலக்ட்ரிக் வாகன (Electric Vehicle) விற்பனையை மேற்கொள்ள நிறுவனம் ஆகஸ்ட் 21 அன்று திருப்பூரில் இரண்டு கடைகளையும் திறக்கப் போகிறது.