சுவையான முட்டை தொக்கு
தேவையானவை :
முட்டை – 4
சின்ன வெங்காயம் – 10
நாட்டு தக்காளி – 3
காய்ந்த மிளகாய் – 6
இஞ்சி & பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
பட்டை – ஒரு துண்டு
லவங்கம் – 1
தேங்காய் – ஒரு கீற்று
மஞ்சத்தூள் – கால் ஸ்பூன்
உப்பு – அரை ஸ்பூன்
எண்ணெய் – 3 ஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லித்தழை – தலா சிறிதளவு
சோம்பு – கால் ஸ்பூன்.
செய்முறை :
முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு போட்டு நன்கு அடித்து, ஒரு கிண்ணத்தில் ஊற்றி இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேகவிட்டெடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
வெங்காயம், தக்காளியையும் நறுக்குங்கள். மிளகாய், பட்டை, லவங்கம், சோம்பு, இஞ்சி & பூண்டு விழுது, மஞ்சத்தூள், தேங்காய் ஆகிய எல்லாவற்றையும் நைஸாக அரைத்தெடுங்கள்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
பிறகு, அரைத்த மசாலாவையும் உப்பையும் சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கி,
பச்சை வாசனை போனபிறகு, அரை கப் தண்ணீர் ஊற்றி, தளதளவென கொதிக்கவிடுங்கள்.
கொதிக்கும் தொக்கில், முட்டை துண்டுகளையும் சேர்த்து நன்கு சுருள சுருளக் கிளறுங்கள். தொக்கு
நன்கு பந்து போல சுருண்டு வந்ததும், கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டுக் கிளறுங்கள்.