எந்த ஒரு ஏற்றுமதியாளரும் அயல் நாட்டு சந்தையில் நுழையும் போது தன்னாட்டு சந்தையிலில்லாத இடர்களை சந்திக்க நேரிடும் .நிகழும்
பல இடர்களில் ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் இரு பெரும் இடர்களாவன : முன்னிறக்கும் இறக்குமதியாளர்கள் மற்றும் அந்நாட்டில்
நிகழும் இடர்கள் . இறக்குமதியாளர்களின் இடர்கள் என்பது வர்த்தக ரீதியில் எழும் இடர்களாகும் . தனி நபர அல்லது நிறுவனம்
திரும்ப செலுத்த வேண்டிய தொகையினை ;நிர்வாக குளறுபடி இன்னபிற காரணங்களால் செலுத்த தவறும் போது அது நேரிடையாக ஏற்றுமதி
நிறுவனத்தை அல்லது ஏற்றுமதியாளரை பாதிக்கும் . அந்நாட்டின் இடர்கள் என்பது அங்கு நிழவும் அரசியல் ,பொருளாதார மற்றும்
கடன் வழங்கும் தன்மையில் நிலையின்மை போன்றவைகள் திரும்ப செலுத்த வேண்டிய தொகையினை செலுத்த தவறும் நிலை உருவவாகும் . எனவே
நாட்டின் இடர்கள் என்பது அங்கு நிழவும் சமுதாய ,அரசியல் மற்றும் பொருளாதார இடர்கள் என்பதைக்குறிக்கும் இதனால் வணிக வங்கிகட்கும்
, பல்நோக்கு நிதி நிறுவனங்கட்கும் இடர்களை நல்கிடும்
ஒரு நாட்டில் நிலவும் பல்வேறு சுமுக இடர்களை சமாளிக்கும் தன்மையினை ஆய்வு செய்ய பல்வேறு அம்சங்கள் உள்ளன .அவையாவன : அரசியல்
நிலைத்தன்மை / நிலையின்மை : நிலவும் அரசியல் நிலை அந்நாட்டின் திரும்ப செலுத்த வேண்டிய தொகையினை செலுத்தும் திறனை நேரிடையாகவும்
பொருளாதார திறனை மரறைமுகமாகவும் பாதிக்கும் எனவே இதனை ஆய்வு செய்வது இன்றியமையாதது .
ஒரு நாட்டின் அரசியல் பொருளாதார மற்றும் சமுதாய கட்டமைப்பு
நிறுவன மற்றும் சட்ட விதி ஒழுங்குமுறைகளின் கட்டமைப்பு
நிர்வாகதிறனில் தனிப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த தன்மைகள்
முந்தைய மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்களின் தன்மைகளும் புள்ளிவிவரங்களும்
நிகர நாட்டு உற்பத்தி (Gross Domestic Product)
நிகர நாட்டு உற்பத்திஇனைக்கொண்டு அந்நாட்டின் பொருளாதார வளத்தின் அளவு தனி நபர வருமான புள்ளி விவரங்களை அளவிட இயலும். நிகர
நாட்டு உற்பத்திஇன மூலம் அந்நாட்டின் பொருளாதார வளத்தினை அளவிடகூடிய நம்பகத்தன்மையானது .
பணவீக்கம் (Inflation )
ஒருநாட்டின் கடன் சேவை இடர்கள் மற்றும் உணரப்பட்ட பணவீக்கத்தின் தன்மையினை கடன் சேவை இடர்களற்ற நாடுகளின் முந்தைய விவரங்களின்
மூலம் அறிய இயலும்.முன்னேறிவரும் நாடுகட்க்கு பணவீக்கத்தின் தன்மை பத்து விழுக்காடு என்பது ஏற்புடையது
செலாவணி அளவு
ஒருநாட்டின் நிகர் நிதியிருப்பு (balance of payment ) நிலையும் ,உள் மற்றும் வெளி நாட்டு தேவைகளுக்கேற்ற சீரமைப்பும் மிக
முக்கிய அம்சமாகும் செலாவணி மதிப்பினை அவ்வப்போது மாற்றியமைப்பதென்பது அந்நாட்டின் நிகர் நிதியிருப்பு (balance of payment
) நிலையினை சீர் செய்துகொள்ளக்கூடிய தன்மையினை உணர்த்தும் . மாற்ற நடுகட்குகந்த ஒப்பு செல்வணி நிலைக்கு சீர் செய்துகொள்ளவதன்
மூலம் நடப்பு கணக்கு நிதி நிலையினை (current account ) மேம்படுத்தி வளர்ச்சி விகிதத்தை முன்னேற்றும் .
இறக்குமதி உள்ளடக்கம் (Import Cover )
இறக்குமதி உள்ளடக்க தன்மையினை கொண்டு இறக்குமதி தொகையினை திரும்ப செலுத்தும் தன்மையினை அளவிட இயலும்.அதனால் ஏற்றுமதி குறையும்
நேரத்தில் அந்நாடு இறக்குமதிக்கு நிதிச்சேவை அளித்திடும் தன்மையினைக் குறிக்கும்.
நிகர் நிதியிருப்பு (balance of payment )
நிகர் நிதியிருப்பு (balance of payment ) தன்மையினை கொண்டு அந்நாட்டின் வெளிவர்த்தக துறையின் வளத்தை அறிய இயலும் அதிக அளவிலான
நடப்பு கணக்கு நிதி நிலை பற்றாக்குறை (current account deficits ) அந்நாட்டின் நம்பகதமை மற்றும் உத்தரவாததன்மையினை சீர்கெடுக்கும்
நாடுகளுக்கிடையிலான இருப்பு (International Reserves)
அதிக அளவிலான – நாடுகளுக்கிடையிலான இருப்பு (International Reserves) குறைவு அந்நாட்டின் ஏற்றுமதியினை ,உள்நாட்டு உற்பத்தியினை
அல்லது இறக்குமதி வளர்ச்சியினை சீரழித்து விடும்
உலக பொது நிதி கடன் / ஒததுக்கீடு (IMF Credit/ Quota )
உலக போது நிதி கடன் / ஒததுக்கீடு அளவினை பயன்படுத்தும் தன்மையினை கொண்டு அந்நாட்டின் நிதி நிலை மற்றும் கடன் ஒதுக்கீட்டை
குரிப்பாலுணர இயலும் உலக ப பொது நிதி கடன் / ஒததுக்கீட்டினை அதிக விகிதத்தில் பயன்படுத்துவதன் மூலம் அந்நாடு நிகர் நிதியிருப்பு
(balance of payment ) குறைபாடு கொண்ண்டுள்ளதையும் அதன் தொடர்பாக பொருளாதார மாற்றங்கள் ஏற்படுத்துவதையும் அதனால் காலப்போக்கில்
இடைக்கால மற்றும் நீண்டகால முரணான தாக்கத்தினை ஏற்ப்படுத்தும் என்பதை உணர முடியும்
ஏற்றுமதி கடன் உத்தரவாத குழும அளவீடு (ECGC Ratings )
ஏற்றுமதி கடன் உத்தரவாத குழுமம் பல்வேறு நாடுகளை ஏழு தரங்களில் வரிசைப்படுத்தியிருக்கிறது ((A1,A2,B1,B2,C1,C2, D) /இம்த
தரத்தின் வாயிலாக குறிப்பிட்ட நாட்டில் நிலவும் அரசியல் இடர்களை உணர இயலும் மேலும் வெளிவர்த்தக கொடுக்கல்,வாங்கல் சீரினையும்
,பொருளாதார அடித்தளங்களையும் அறிந்து கொள்வதில் முக்கிய பாங்கு வகிக்கிறது .ஏற்றுமதி செய்ய வேண்டியுள்ள நாட்டின் பொருளாதார
மற்றும் அரசியல் நிலைகளையும் அறிய வேண்டிய அவசியம் ஏற்றுமதியாளர்க்கு உள்ளது . ஏற்றுமதி கடன் உத்தரவாத குழுமம் இது போன்ற
இடர்களை அறிவுறுத்துவதன் மூலம் ஏற்றுமதியாளர்கள் அரசியல் மற்றும் பொருளாதார இடர்களிளலிரிந்து காத்துக்கொள்ள இயலும் .