இறக்குமதியாளரை எப்படி கண்டுபிடிப்பது? ஏற்றுமதி செய்ய நினைக்கும் அனைவரும் கேட்கும் முதல் கேள்வி இதுதான். இறக்குமதியாளரை
கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளன. அதற்கு முன் இவற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
*முதலில் நீங்கள் யார் என்று Google-க்கு தெரிய படுத்துங்கள். அதற்காக உங்களுக்கு ஒரு website-ஐ உருவாக்கவும். அதில் நீங்கள்
ஏற்றுமதி செய்ய நினைக்கும் பொருளின் Catalog-ஐ தயார் செய்து website-ல் பதிவு செய்யவும்.
* நம் ஏற்றுமதி செய்ய நினைக்கும் பொருள் தற்போது எந்த நாட்டிற்கு தேவை அதிகம் உள்ளது.
*அந்த பொருட்கள் நமது நாட்டில் எங்கு அதிகம் கிடைக்கிறது.
*அதை எப்படி Packing செய்வது.
*அந்த பொருள் எப்படி உற்பத்தி செய்யபடுகிறது.
* உற்பத்தியாளரிடம் இருந்து துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லும் வாகனச் செலவு எவ்வளவு.
* Quotation-ஐ எப்படி தயார் செய்வது.
*ஏற்றுமதி செய்வதற்கு முன் அந்த பொருளின் நம் நாட்டு சட்ட திட்டங்கள் மற்றும் அந்நாட்டு சட்ட திட்டங்கள்
என்ன. இது போன்ற தகவல்களை முழுவதும் அறிந்த பிறகு இறக்குமதியாளரை தொடர்பு கொள்ளாம்.
இறக்குமதியாளரை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்.
1. வெளிநாடுகளில் உள்ள Indian embassy -ஐ தொடர்பு கொண்டு அவர்களிடம் நாம் ஏற்றுமதி செய்ய நினைக்கும் பொருளின் தகவல்களை கொடுத்து.அந்த
நாடுகளில் உள்ள இறக்குமதியாளர்களின் தகவல்களை EMAIL – மூலம் பெறலாம்.
2. EXPORT PROMOTION COUNCIL – ல் உறுப்பினர் ஆவதன் மூலம் அவர்களிடம் இருந்து இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களின்
தகவல்களை எளிதில் பெறமுடியும்.
3. B2B Portal -ல் Paid Membership ஆவதன் மூலம் இறக்குமதியாளர்களின் தகவல்களை பெறலாம். (இதில் உறுப்பினர் ஆவது கட்டாயம்
இல்லை )
1.www.alibaba.com
2.www.indiamart.com
3.www.tradeindia.com
4.www.ec21.com
5.www.exportersindia.com
4.நமது அருகில் உள்ள வெளிநாடுகளுக்கு சென்று ( Sri Lanka, Singapore, Malaysia, Indonesia ) இறக்குமதியாளர்களை நேரில் தொடர்பு
கொண்டு Sample – ஐ காண்பித்து Oder-களை பெறலாம்.
குறிப்பு :
* அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு விலை யை அதிகமாக சொல்ல கூடாது.
* ஏற்றுமதி செய்யப்படும் பொருளின் தரம் இறக்குமதியாளரின் தேவைகேற்ப இருக்க வேண்டும்.
* நாம் முதல் முறையாக ஏற்றுமதி செய்பவராக இருந்தால் இறக்குமதியாளரை சோதிப்பது மிக மிக அவசியம். அவர்களை சோதிப்பதற்கு ECGC – ஜ தொடர்பு கொண்டு அவர்களிடம் இறக்குமதியாளர் பற்றிய விவரங்களை கொடுத்து அதற்கான கட்டணத்தையும் செலுத்தி இறக்குமதியாளர்
பற்றிய முழு விவரங்களையும் பெறலாம்.