ஏற்றுமதி செய்வதற்க்கான பொருளை எப்படி தேர்ந்தெடுப்பது?

நம்மில் எத்தனை பேர் IE Code எடுத்து ஏற்றுமதி செய்யாமல் இருக்கிறோம்? இதற்கு முதல் காரணம் எந்த பொருளை தேர்ந்தெடுப்பது
என்பதில் குழப்பம்.

 

நாம் ஏற்றுமதி(Export) செய்ய எந்த பொருளை தேர்ந்தெடுக்கின்றோமோ. அந்த பொருள் மற்றும் அந்த பொருளின் தரத்தைப் பொருத்துதான்
நமது வெற்றி தீர்மாணிக்கப்பபடுகிறது.

முதன் முதலில் ஏற்றுமதி செய்ய நினைப்பவர்கள் பல பொருட்களில் கவனம் செலுத்துவதை தவிர்க்கவும்.

நாம் ஏற்றுமதி செய்ய நினைக்கும் பொருள் நமக்கு பரிற்சியமான பொருளாக இருக்க வேண்டும்.

எளிதில் அழுகும் பொருளை ஏற்றுமதி செய்வதை தவிர்க்க வேண்டும்.

FOCUS PRODUCT SCHEME – ன் கீழ் உள்ள பொருட்களை தேர்ந்தெடுக்கலாம் ஏன் என்றால் இந்த பொருட்களுக்கு இந்திய அரசு அதிக சலுகைகளை
தருகின்றது.

மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக லாபத்தை பெறலாம். அந்த பொருட்களுக்கு வெளிநாடுகளில் அதிக தேவை
உள்ளது.

ஒரு இறக்குமதியாளர் நம்மிடம் முதலில் கேட்பது பொருளை பற்றிய தகவல்கள் தான் நம் கொடுக்கும் தகவல்களில் ஏதேனும் தவறு இருந்தால்
இறக்குமதியாளர்க்கு நம் மீது இருக்கும் நம்பிக்கை போய் விடும்.

எனவே நம் ஒரு பொருளை தேர்ந்தெடுக்கும் பெழுது கீழ் உள்ள அனைத்து விவரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

* அந்த பொருளின் தரம்.

* அந்த பொருளின் எடை.

* அதை எப்படி Packing செய்வது.

* அந்த பொருளின் தற்போது உள்ள சந்தை நிலவரம்.

* அந்த பொருளிட்கான அடக்க விலை மற்றும் FOB விலை.

*அந்த பொருளிட்கான தேவை அதிகம் உள்ள நாடு.

* அந்த பொருளிட்கான இந்திய அரச வழங்கும் ஊக்கத் தொகை மற்றும் வரிச்சலுகை.

* அந்த பொருள் எந்த EXPORT PROMOTION COUNCIL (EPC)-ன் கீழ் உள்ளது.

* அந்த பொருளுக்கு ஏதேனும் தடை உள்ளதா.

* அந்த பொருளிட்கான HS CODE என்ன.

இது போன்ற தகவளை ஏற்றுமதியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.