PM.கிருஷ்ண ராஜன் DME

PM.கிருஷ்ண ராஜன் DME D.ASTRO பொறியியல் பட்டதாரி கடந்த பத்து வருடங்களில் பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்தவர். வாஸ்து குறித்த மூட நம்பிக்கை அடியோடு மாற்றியவர். நீளம் அகலம், குழி  கணக்குகள்  போன்றவைகள் அனைத்துமே மூடநம்பிக்கை என நிரூபித்தவர் .

அறிவியல் ரீதியாக வாஸ்து எப்படி வேலை செய்கிறது என்பதை இந்தியாவில் முதல் முதலில் எடுத்துக் கூறியவர்.  தானும் உயர்ந்து தன்னை நம்பி கூப்பிட்டவர்களையும் மிக உன்னதமான நிலைக்கு அழைத்து சென்றவர் .

இந்த உலகிற்கு சூரியன்தான் கண்கண்ட கடவுள்,  அவர் நமக்கு எப்படி வஸ்துவாக இருந்து நன்மை அளிக்கிறார்  என்பதே வாஸ்து .

சூரியன் ஆண் வடிவமாகவும், பூமி பெண் வடிவமாகவும் இருப்பதால் தான் இங்கு பூமியில் உயிரினங்கள் வாழ முடிகிறது. ஒரு உயிரினம் தோன்றி அதன் இன்ப  துன்பங்களை அனுபவித்து வயது முதிர்த்து பின்பு இறப்பதற்கு காரணம் இந்த பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங்களே காரணமாக அமைகிறது .

இயற்கையில் மனிதன் என்பவன் யார் அவனுக்கு ஆறாவது அறிவான மனம் என்கின்ற அறிவு எப்படி வந்தது  இவனுக்கு மட்டும் உலகை ஆளும் திறன் எப்படி வந்தது  மனிதனுக்கு மட்டும் பேராசை என்கிற குணம் எப்படி வந்தது . எந்த ஒரு உயிரினத்திற்கும் வராத வியாதியான கேன்சர் போன்றவை கொடிய வியாதிகள் மனிதனுக்கு மட்டும் வரக் காரணம் என்ன . இதுபோன்ற பல கேள்விகளுக்கு கடந்த பத்து வருடங்களாக ஆராய்ந்து அவன் குடியிருக்கும் வீட்டமைப்பு காரணம் என கண்டுபிடித்தவர் இவரே. .இந்த உண்மையை உலகத்திலுள்ள அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் வாஸ்துவை  சேவையாக செய்து வருகிறார்.