பெண்கள் செய்யக் கூடாதவைகள்
பெண்கள் சாஸ்த்திரப் படி செய்யக் கூடாதவைகள் எனச் சில காரியங்கள் உள்ளது.
அவைகள் :
நிலத்தை கால் விரலால் கீரக் கூடாது.
வாயிற்படிக்கு நேரே படுக்கக் கூடாது.
நீரில் தன் நிழலைப் பார்க்கக் கூடாது.
எண்ணெய் தேய்த்துக் கொண்டதும் தலை விரி கோலாமாக இருத்தல் கூடாது.
குளிப்பதற்காக தலையில் எண்ணெய் வைத்துருக்கும் போது யாரையும் வழி அனுப்பவோ , சாப்பிடவோ கூடாது .
யாரும் சாப்பிடும் போது விளக்கை அணைக்கக் கூடாது.
வீட்டில் உள்ளவர்கள் வெளி ஊர்களுக்கு சென்று இருக்கும் போது எண்ணெய் வைத்துத் தலை முழுகுதல் கூடாது.