மாடி படி அமைப்பு எங்கு வர வேண்டும்? அதனால் ஏற்படும் நன்மை தீமைகள் !
வாஸ்து பற்றிய அனுபவம் இல்லாத நபர்கள் கூட ஒரு வீட்டை உருவாக்க முடியும். ஆனால் வீட்டில் மிக முக்கியமாக படி அமைப்பை உருவாக்கும்போது அனுபவமிக்க வாஸ்து நிபுணர் இல்லாமல் அமைப்பது தவறில் தான் சென்று முடியும். இதற்கு காரணம், படி அமைப்பு என்பது ஒரு வீட்டிற்கு நன்மையை செய்வதை காட்டிலும் தீமையையே அதிகம் செய்யக்கூடியது.
படி அமைப்பு எங்கு வர வேண்டும்? அதனால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகள் பற்றி பார்ப்போம்.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதி , வடகிழக்கு பகுதி :
1. இந்த பகுதியில் எக்காரணம் கொண்டும் படி அமைப்பை அமைக்கக்கூடாது.
2. தவறுதலாக இந்த பகுதியில் படி அமைப்பு வருமானால் கண்டிப்பாக மிக மோசமான கெடுதல்களை ஏற்படுத்தும்.
3 தந்தை மகன் உறவில் விரிசல் விபத்துக்கள் திருமண வாழ்க்கையில் திருப்தியற்ற நிலை கோமா நிலைக்கு தள்ளபடுவது
கிழக்கு நடுப்பகுதி :
1. இந்த பகுதியில் படி அமைப்பு வருவது மிக தவறு.
2. குழந்தை பாக்கியம், திருமணத்தடை, கணவன் மனைவி உறவில் விரிசல் போன்றவைகள் ஏற்படக்கூடும்.
3. பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்புபான உடல்ரிதியான பல பிரச்சினைகள் வரக்கூடும்
தென் கிழக்குப் பகுதி :
1. இப்பகுதியில் கட்டிடத்திற்கு வெளிப்புறத்தில் கேண்டி லீவர் முறையில் படி அமைப்பு வரலாம்.
2. கட்டிடத்தின் உட்பகுதியில் படி அமைப்பு வருவது தவறு.
3. அவ்வாறு வரும் பட்சத்தில் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். பெண்களுக்கு மனநலம் தொடர்பான மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதுமட்டுமின்றி
4. திருட்டு
5. தீ விபத்து
6. கோர்ட் கேஸ் போன்ற கெடுதலான நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தெற்கு நடுப்பகுதி :
இந்த பகுதியில் வீட்டின் உட்பகுதியில் படி அமைப்பது சிறப்பு.
தென் மேற்கு :
1. வீட்டின் வெளிப்பகுதியில் இருபக்கமும் கேண்டி லீவர் முறையில் படி அமைத்துக் கொள்வது சிறப்பு.
2. வீட்டின் உட்பகுதியில் படி அமைப்பு வருவது தவறு.
3. இதனால் ஆண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
4. மனதளவிலும், உடலளவிலும், பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
மேற்கு நடுப்பகுதி :
இந்த பகுதியில் வீட்டினுள் படி அமைப்பு வருவது சிறப்பு.
வடமேற்கு :
1. வீட்டின் வெளிபுறத்தில் இருபுறமும் கேண்டி லீவர் முறையில் படி வருவது சிறப்பு.
2. வீட்டின் உட்பகுதியில் படி அமைப்பு மிக மிக தவறு.
3. இதனால் ஆண் பெண் இருவருக்கும் மனநலம் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடும்.
4. ஆணின் நாணயம் இழக்கக்கூடும்.
5. கடன், வறுமை, நோய், மறைமுக எதிரிகள், பில்லி சூனியம் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்
.
6 கடனுக்குக்கா ஊரை விட்டு வெளியேறுதல்
வடக்கு நடுப்பகுதி :
இந்த பகுதியில் வீட்டிற்குள்ளும் சரி, வெளிப்புறத்திலும் சரி படி அமைப்பு வருவது தவறு. வடகிழக்கு பகுதியில் வரும்போது ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் இதற்கும் பொருந்தும். 8220544911