வாஸ்துபடி வடகிழக்கு படி அமைப்பு வருவது சரியா

வாஸ்துபடி வடகிழக்கு படி அமைப்பு வருவது சரியா?

 

நமது வீடு அமைப்பில் வடகிழக்கில் படி அமைப்பு வரலாமா ? அப்படி வரும் பட்சத்தில் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளைப் பற்றி அறிவோம்.

வடகிழக்கு படி அமைப்பு

நமது வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு சேரக்கூடிய பகுதியை வடகிழக்கு என்போம்.

வடக்கு பகுதியில் 50% கிழக்கு பகுதியும், கிழக்கு பகுதியில் 50 % வடக்கு பகுதியும், சேர்ந்ததே வடகிழக்கு. நான் குறிப்பிட்ட இந்த பகுதியில் இரண்டு பக்கத்திற்குமே படி அமைப்பு வருவது மிக மிக தவறு. ஆபத்தும் கூட.

நன்மைகள்

வடகிழக்கில் படி அமைப்பு உள்ள வீட்டில் ஒருபோதும் நன்மையை எதிர்பார்க்க முடியாது.

தீமைகள்

1. மூட நம்பிக்கைகளில் அந்த மொத்த குடும்பமும் மூழ்கியிருக்கும்.

2. கடவுள் நம்பிக்கையில் அதீத ஈடுபாட்டுடன் திகழ்வார்கள்.

3. மனநலம் தொடர்பான பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு.

4. ஒரு தலைமுறை வீடாக மாற வாய்ப்பு உண்டு .

5. ஒற்றைத் தலைவலி, மைக்ரான் தலைவலி.

6. மர்மமான நோய்கள்.

7. தலைப் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுதல்.

8. நரம்பு சம்பந்தமான நோய்கள்.

9. கடன் பிரச்சனை.

10. நிரந்தர வேலையில்லாத நிலை.

11. தந்தை நல்ல பதவியில் இருந்தும் தன்னுடைய மகனுக்கு நல்ல ஒரு வாய்ப்பையும், வாழ்க்கையையும் ஏற்படுத்தி கொடுக்க முடியாத நிலை.

8220544911