சரும பிரச்சனைகள் தீர எளிய வழிகள்

சரும பிரச்சனைகள் தீர எளிய வழிகள்..!

  1. வேப்பிலையை சுத்தம் செய்து கழுவி உலர வைத்து அரைத்து உடம்பிற்கு தேய்த்துக் குளித்தால் சரும நோய்கள் வராது.
  2. நெல்லிப் பொடியை கஸ்தூரி மஞ்சளோடு சேர்த்து சருமத்தில் தடவி குளித்தால் சரும வியாதிகள் குணமாகும்.
  3. சரும நோய் குணமாக மஞ்சள், வேப்பிலையை அரைத்து பூச குணமாகும்.
  4. ஆரஞ்சுப் பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் சரும நோய்கள் குறையும்.
  5. வேப்பம்பூ கஷாயத்துடன் நெல்லிக்காய் சாறு, தேன் கலந்து சாப்பிட சரும நோய்கள் குறையும்.
  6. ரோஜாப்பூ இதழ்களை, பயத்தம்பயிறு, பூலாங்கிழங்குடன் சேர்த்து அரைத்து விழுதாக உடலில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய்கள் குறையும்.
  7. மருதாணி எண்ணெய்  சருமத்தில் தடவி வந்தால் அரிப்பு நீங்கும்.
  8. பூங்காவியை பசும் பாலில் கலந்து, சிறிது நேரம் அசையாமல் வைத்து இருந்தால், மண் முழுவதும் அடியில் தங்கிவிடும். மேலாக உள்ள பாலை வடித்து விட்டுச் செம்மண்ணை மட்டும் பாத்திரத்தில் போட்டு, வெயிலில் நன்றாகக் காயவைத்துப் பின் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு டீஸ்பூன் அளவு தேனில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் குறையும்.
  9. தேங்காய்ப் பால்,தேன் கலந்து மசாஜ் செய்ய சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.
  10. அரசமரப் பட்டையை சிதைத்து கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சரும நோய்கள் அண்டாது.