உங்கள் வீட்டின் பிரச்சனைக்கு இந்த தவறுகள் தான் காரணமா?
பிரச்சனைக்கு இந்த தவறுகள் தான் காரணமா?
கேள்வி :
ஐயா, வணக்கம்! நான் திருநெல்வேலி. எனக்கு 2 மகன், 1 மகள். என்னுடைய கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். என்னுடைய மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. என்னுடைய முதல் மகனுக்கும், இரண்டாவது மகனுக்கும் திருமணம் தடையாக உள்ளது. என்னுடைய முதல் மகனுக்கு சரியான வேலை அமையவில்லை. நாங்கள் குடியிருக்கும் வீடு தெற்கு திசை பார்த்த வீடு. எங்களுக்கு உதவ முடியுமா ஐயா?
பதில் :
இன்பம், துன்பம் இரண்டற கலந்ததே மனித வாழ்க்கை. இதில் இரண்டுமே நிரந்தரம் கிடையாது.
உங்களுடைய வீட்டின் அமைப்புகள் இப்படி இருக்க வாய்ப்புண்டு.
1. தென்மேற்கு வாசல் அல்லது தெற்கு நடுப்பகுதியில் வாசல் இருக்கும்.
2. தென்மேற்கில் மாஸ்டர் பெட்ரூம் இல்லாமல் இருக்க வாய்ப்;புண்டு.
3. தெற்கு பகுதியில் போர்டிக்கோ அமைப்பு கீழே இறங்கி தாழ்வாக போட்டிருக்கலாம்.
4. தெற்கு பகுதியில் காலியிடம் அதிகமாகவும், வடக்கு பகுதியில் மிக குறைவான இடைவெளியில் இருக்கலாம்.
5. கிழக்கு பகுதியில் குறைவான இடைவெளியோ அல்லது கிழக்கு முழுவதும் மூடப்பட்ட வீடாக இருக்கலாம்.
6. கிழக்கு பகுதியிலும், வடக்கு பகுதியிலும் பொது சுவராக இருக்கலாம்.
7. வடக்கில் பூஜையறை அல்லது சமையலறை இருக்க வாய்ப்புண்டு.
8. கழிவறை, மலக்குழிகள் தென்கிழக்கில், தெற்கு நடுப்பகுதி அல்லது தென்மேற்கில் இருக்க வாய்ப்புண்டு.
9. போர், கிணறு, சம்ப், தரைக்கு கீழ் தண்ணீர் தொட்டி அமைப்புகள் உங்களது வீட்டில் தென்கிழக்கு, தெற்கு நடுப்பகுதி, தென்மேற்கில் இருக்க வாய்ப்புண்டு.
நான் மேற்கூறிய அமைப்புகள் உங்களது வீட்டில் நிச்சயம் இருக்கும். உங்களது வீட்டின் அமைப்பில் தென்மேற்கு பகுதி தவறாகும்போது கணவன், மனைவியை பிரித்து வைக்கும். இந்த பகுதி ஆண்களுக்கு உண்டான பகுதி என்பதால் உங்களுடைய மூத்த ஆண்வாரிசுக்கும் அதே நிலை ஏற்படும். அதாவது கணவன் மனைவி இருவரையும் சேர்ந்து இருப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தாது.
கிழக்கு பகுதி இந்திரனின் திசை என்போம், அந்த திசை மூடப்படும்போது மனம், தொழில், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம், ஆரோக்கியம், கண்பார்வை போன்ற பல பிரச்சனைகள் வரக்கூடும். வீட்டை மாற்றினால் உங்களது எண்ணம் மாறும். உங்களது எண்ணம் மாறினால் உங்களது வாழ்க்கை உயரும்.
82205-44911