வெற்றிலையின் மருத்துவ குணங்கள்

வெற்றிலையின் மருத்துவ குணங்கள்

வெற்றிலை பாக்குகளைக் கூட்டி குறைத்து சாப்பிடும்போது பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் காலையில் பாக்கு அதிகமாகவும், வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் மெல்லவேண்டும். இதனால் மலச்சிக்கல் நீங்கி, இரண்டு முதல் நான்கு முறை பேதியாகலாம். ரொம்ப பேதியானால் தயிர் சாப்பிட்டால் நின்றுவிடும். கவலை வேண்டாம்.

பசியே இல்லாதவர்கள் மதிய உணவுக்குப் பிறகு, சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும், வெற்றிலை பாக்கு குறைவாகவும் மென்றால் நன்றாகப் பசி எடுக்கும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண், வாயில் துர்வாடை பிரச்சனை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மெல்லலாம்.

ஒரு கவுளி வெற்றிலை என்பது நூறு வெற்றிலை . ஒரு கட்டு என்பது ஆயிரம் வெற்றிலை இப்படியாக வெற்றிலையின் எண்ணிக்கைகள் இருக்கும்.

மொத்தத்தில் மருத்துவரின் ஆலோசனையுடன் மேற்கண்ட படி வெற்றிலைகளை உண்டு சில உடல் பிணிகளில் இருந்து நாமும் கூட விடுபடுவோம்.