நாம் சேர்ப்பது அர்ப்பத்தையா இல்லை அற்புதத்தையா

நாம் சேர்ப்பது அர்ப்பத்தையா? இல்லை அற்புதத்தையா?

 

மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும் ஒரே மண்னைத் தின்று ஒரே தண்ணீரைக் குடித்து வளர்கின்றன. ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும் வேப்ப மரம் கொடுக்கும் பழத்திற்கும் ருசியில் வேறுபட்டு இருப்பது போல நாம் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் தான். ஒரே நீரைத் தான் அருந்துகிறோம், ஒரே காற்றைத் தான் சுவாசிக்கிறோம். ஆனால் வழியில் எதை சேகரித்து நம்மில் உள்ளடக்கமாக அமைத்துக் கொள்கிறோமோ அதைப் பொறுத்துத் தான் நம்முடைய தன்மை வெளிப்படும்.

 

நாம் எதை சேர்க்கிறோம் அர்ப்பத்தையா? இல்லை அற்புதத்தையா?

 

அர்ப்பம் என்னும் ஆறு குணங்கள்

 

1 பேராசை

 

2 சினம்

 

3 கடும்பற்று

 

4 முறையற்ற காமம்

 

5 உயர்வு தாழ்வு மனப்பான்மை

 

6 வஞ்சம்

 

அற்புதம் என்னும் ஆறு குணங்கள்

 

1 நிறை மனம்

 

2 பொறுமை

 

3 ஈகை

 

4 ஒழுக்கம்

 

5 சம நோக்கு

 

6 மன்னிப்பு

 

இவை அனைத்திற்கும் அடித்தளமாக உள்ள அன்பை புரிந்து கொண்டால் அர்ப்பம் நம்முள் எட்டிப் பார்காது. அற்புதம் நம்மை விட்டு விலகிப் போகாது.