ஜாதகம் மூலம் உங்களுடைய தொழில் அமைப்பினை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா

ஜாதகம் மூலம் உங்களுடைய தொழில் அமைப்பினை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஓம் ஸ்ரீ மஹாலட்சுமியே நமஹ

On Line (Phone Call , Whatsapp Video Call )மூலம் ஜோதிட பலன் ஜாதகத்தை ஆய்வு செய்து பலன்கள் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு: ஜாதகம் இல்லாதவர்கள் பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் அனுப்பினால் போதுமானது.

தொழில்

ஒருவருடைய வாழ்வில் தொழில் என்பது மிகவும் இன்றியமையாதது. அத்தொழில் ஜாதகம் மூலம் ஆய்வு செய்து அதற்குரிய பாவத்தை ஆய்வு செய்து அந்த தொழிலை செய்வதன் மூலம் வாழ்வில் மிகச்சிறந்த வெற்றி பெற முடியும்.

பாவம்:

ஒருவருடைய ஜாதகத்தில் 10ம் பாவம் என்பது தொழில் ஸ்தானம் ஆகும்.

ஆனால் அனைத்து பாவங்களிலும் தொழில் உள்ளது.

1 ம் பாவம் 10 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் ஜாதகர் தான் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கும்.

1 ம் பாவம் 10 ம் பாவ தொடர்பு என்றால் மூளையை பயன்படுத்தி தொழில் செய்தல்.

2 ம் பாவம் 10 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் நகைக்கடை, வட்டித்தொழில், மளிகைக் கடை, போன்ற தொழில் செய்யலாம்.

3 ம் பாவம் 10 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் புத்தகக்கடை, எலக்ரிகல்ஸ், எலக்ரானிக்ஸ் கம்பியூட்டர் கடை, செல்போன் கடை, தெரு ஓர கடைகள் மற்றும் ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து செல்லும் தொழில் செய்யலாம்.

4 ம் பாவம் 10 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் ரியல் எஸ்டேட் தொழில் வீடு கட்டுமான தொழில், வாகன விற்பனை தொழில் அனைத்து விதமான சிறிய உற்பத்தி நிறுவனங்கள் தொழில் செய்யலாம்.

5 ம் பாவம் 10 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், ஜோதிட தொழில், அழகு சாதன தொழில், பரிசு சீட்டு விற்பனை பங்கு சந்தை வர்த்தகம் போன்ற தொழில் செய்யலாம்.

6 ம் பாவம் 10 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் ஓட்டல் தொழில், விவசாய தொழில், விவசாயத்திற்கு உதவி புரியும் தொழில் (உரக்கடை, பூச்சி மருந்து கடை, வழக்கறிஞர் தொழில், மருத்துவ தொழில், கோழிப்பண்ணை, ஆட்டுபண்ணை போன்ற தொழில் செய்யலாம்.

7 ம் பாவம் 10 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் சிறிய வகை சொந்த தொழில் திருமண சம்மந்தப்பட்ட தொழில், வாடிக்கையாளர்கள் அதிகம் வரும் தொழில் செய்யலாம்..

8 ம் பாவம் 10 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் இன்சூரன்ஸ் தொழில், கந்து வட்டி தொழில், கசாப்பு கடை (கறிக்கடை) ஆபத்தான தொழில்கள் (சுரங்கத்துறை) தொழில் செய்யலாம்.

9 ம் பாவம் 10 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் அறக்கட்டளை, ஆன்மிக டிரஸ்ட், வெளிநாடு சம்பந்தபட்ட தொழில் செய்யலாம்.

10 ம் பாவம் 10 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் உற்பத்தி தொழில், பெரிய நிறுவனங்கள், பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் தொழில் போன்றவை செய்யலாம்.

11 ம் பாவம் 10 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் கூட்டுறவு சங்கம், நண்பர்கள் மூலம் செய்யும் தொழில் செய்யலாம்.

12 ம் பாவம் 10 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் இரண்டாவதாக செய்யும் தொழில் பணம் முதலீடு செய்து அதன் மூலம் தொழில் செய்யலாம்.

 

குறிப்பு: இதில் எந்த பாவத்திலும்  8ம் பாவம் தொடர்பு கொண்டால் அதன் மூலம் இழப்பு, நஷ்டம், கடன் போன்றவை ஏற்படும்.

On – Line  மூலம் பலன் அரிய தொடர்பு கொள்ளவும்.

அகோபிலம் ஜெகதீஸ்

9894909036