ஜாதகம் மூலம் உங்களுக்கு பணம் எப்படி வரும் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா

  ஜாதகம் மூலம் உங்களுக்கு பணம் எப்படி வரும் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஓம் ஸ்ரீ மஹாலட்சுமியே நமஹ

On – Line (Phone call,Whatsapp Video Call )  மூலமாக ஒருவருடைய ஜாதகத்தை ஆய்வு செய்து ஜோதிட பலன் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.

பணம் எப்படி வரும்

ஒருவருடைய ஜாதகத்தில் பணம் எந்தெந்த வழிகளில் வரும் என்பது 2 ம் பாவம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பணம் தரும் கிரகம் எது

நமது ஜாதகத்தில் 2ம் பாவத்தில் உள்ள கிரகம் எதுவோ அதன் வழியில் பணம் கிடைக்கும்.

சூரியன் – அரசாங்கம், அரசியல், தந்தை வழி மூலம் பணம் கிடைக்கும்.

சந்திரன் – பணம் அடிக்கடி வரும், அம்மா வழியில் பணம் கிடைக்கும். பணவரவு நிலையாக இருக்காது.

குரு – வங்கிப்பணம், நியமான உழைப்பு, தொழில் மூலம் கிடைக்கும் பணம்.

சுக்கிரன் – கணக்கில் வராத பணம், எல்லா வழிகளிலும் பணம் சேர்க்கும் திறன்.

செவ்வாய் – கடின உழைப்பின் மூலம் கிடைக்கும் பணம்.

புதன் – விரைவான பண வரவு, இளம்வயதில் பண வரவு.

ராகு – பெரிய பெரிய பணம், வெளிநாடு மூலம் கிடைக்கும் பணம்.

கேது – சிறிது சிறிதாக வரும் பணம்.

சனி – பணம் தாமதமாக வருவது.

 

பாவங்கள்:

1 –ம் பாவம் 2ம் பாவத்தை தொடர்பு கொண்டால் ஜாதகரின் மூளையில் பணத்தை பற்றிய சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும்.

2 – ம் பாவம் 2ம் பாவத்தை தொடர்பு கொண்டால் கையில் உள்ள பணம்,மற்றும் 2,4,6,10 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் மிகபெரிய பணக்காரர் ஆக முடியும்.

3 – ம் பாவம் 2ம் பாவத்தை தொடர்பு கொண்டால் ஒப்பந்த தொழில், போக்குவரத்து தொழில் மூலம் கிடைக்கும் பணம்.

4 – ம் பாவம் 2ம் பாவத்தை தொடர்பு கொண்டால் வாகனம், வீடு மூலம் கிடைக்கும் பணம்.

5 – ம் பாவம் 2ம் பாவத்தை தொடர்பு கொண்டால் பங்கு சந்தை வியாபாரம், உழைப்பில்லாமல் கிடைக்கும் பணம்.

6 – ம் பாவம் 2ம் பாவத்தை தொடர்பு கொண்டால் நிரந்தர வேலையில் மூலம் கிடைக்கும் பணம்.

7 – ம் பாவம் 2ம் பாவத்தை தொடர்பு கொண்டால் மனைவி மூலம் கிடைக்கும் பணம்.

8 – ம் பாவம் 2ம் பாவத்தை தொடர்பு கொண்டால் எதிர் பாரத நேரத்தில் கிடைக்கும் பணம்.

9 – ம் பாவம் 2ம் பாவத்தை தொடர்பு கொண்டால் பூர்விகம் மூலம் கிடைக்கும் பணம்.

10 – ம் பாவம் 2ம் பாவத்தை தொடர்பு கொண்டால் பெரிய தொழில், பெரிய பதவி மூலம் கிடைக்கும் பணம்.

11 – ம் பாவம் 2ம் பாவத்தை தொடர்பு கொண்டால் நண்பர்கள் மூலம் கிடைக்கும் பணம்.

12 – ம் பாவம் 2ம் பாவத்தை தொடர்பு கொண்டால் முதலீடுகள் மூலம் கிடைக்கும் பணம்.

குறிப்பு:

2 – ம் பாவம் 8,12 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் பண இழப்பு, வட்டி கட்டுதல் போன்றவற்றில் ஜாதகர் சிக்க நேரிடும்.

2 – ம் பாவம் 5,9 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் ஜாதகர் கையில் பணம் தங்காது வந்தவுடன் செலவாகி விடும்.

பணம் வருவதற்கு உண்டான பரிகாரம் 2ம் பாவ நட்சத்திரம் உள்ள கோவில் சென்றால் பணம் சம்பந்தமான தேவைகள் பூர்த்தியாகும்.

                                                                                          நன்றி

அகோபிலம் ஜெகதீஸ்

9894909036