வார ராசிபலன்கள்

வார ராசிபலன்கள்

30.07.2018 முதல் 05.08.2018 வரை

மேஷம் :

வெளிவட்டாரங்களில் உங்களின் மரியாதை உயரும். புதிய வேலைக்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும். திட்டமிட்டு எண்ணிய செயல்களை முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். தாய்மாமன் உறவு மேம்படும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும். புதிய அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் குறைந்து சுமூகமான சூழல் உண்டாகும். திடீர் யோகத்தால் எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

 

ரிஷபம் :

இளைய சகோதரர்கள் உங்களுக்கு பக்கபலமாக செயல்படுவார்கள். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். எண்ணிய எண்ணங்களில் காரியசித்தி உண்டாகும். தொழிலில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். உறவினர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவோர் சற்று கவனத்துடன் இருக்கவும். நண்பர்களுடன் பேசும்போது நிதானம் வேண்டும். பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

 

மிதுனம் :

குடும்ப பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தன, தானிய சம்பத்துக்களால் இலாபம் அதிகரிக்கும். புத்திரர்களால் சுபச் செய்திகள் கிட்டும். நண்பர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். சாஸ்திர கல்வி பற்றிய தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றி புதிய நபர்களை நியமிப்பீர்கள். மூத்த சகோதரர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். அந்நியர்களால் தன விருத்தியும், சில சங்கடமான சூழலும் உண்டாகும். கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் நீங்கும்.

 

கடகம் :

தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த கடன் உதவிகள்கிட்டும். குணநலன்களில் சிறிது மாற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்த இடர்பாடுகள் குறைந்து புத்துணர்ச்சி அடைவீர்கள். வழக்குகளில் இருந்த இழுபறிகள் குறைந்து சுமூகமான நிலை உருவாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். திட்டமிடாத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சலும், கோபமும் உண்டாகலாம். குடும்ப நபர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சுமாரான தனவரவு உண்டாகும்.

 

சிம்மம் :

வாகன பயணங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் நிதானம் வேண்டும். விவாதம் செய்யும்போது சிந்தித்து பேசவும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். ஆன்மீக பணிகளை மேற்கொள்வதால் கீர்த்தி உண்டாகும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். புதிய சூழலுக்கு ஏற்றவாறு தங்களை அனுசரித்து செல்லவும். வியாபாரிகளுக்கு அனுகூலமான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் இழுபறி உண்டாகும்.

 

கன்னி :

பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். வெளிநாட்டு பணி விவகாரங்களில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பொருட்சேர்க்கை உண்டாகும். கண்களில் ஏற்பட்ட உபாதைகளின் வீரியம் குறையும். சாதுர்யமான பேச்சுகளால் எண்ணியவை ஈடேறும். பிறருக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். செய்தொழிலில் இருந்து வந்த பழைய பொருட்கள் யாவும் விற்பனையாகும். தலைமை பதவியில் உள்ளோர்களின் ஆதரவு கிடைக்கும்.

 

துலாம் :

புதிய முயற்சிகளில் காலதாமதமான முன்னேற்றம் உண்டாகும். பணிகளில் பொறுப்புகள் மற்றும் அதிகாரம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் மதிப்பு மற்றும் சிநேகிதம் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவு அமையும். எதிர்பாராத சுபச் செய்திகளால் சுப விரயம் உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். தந்தைவழி உறவுகளால் அலைச்சல் உண்டாகும். செய்யும் பணிக்கான அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்க காலதாமதமாகும்.

 

விருச்சகம் :

வெளியூர் பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். கால்நடைகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்த்து அனுசரித்து செல்லவும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் எண்ணிய பிரார்த்தனைகள் நிறைவேறும். புதுவிதமான நுணுக்கங்களை பயில்வீர்கள். செய்யும் பணிகளில் கவனம் தேவை. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.

 

தனுசு :

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். தானிய சம்பத்துக்களால் லாபம் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் முன்னேற்றம் உண்டாகும். மனச்சோர்வுகளால் வேலையில் கவனமின்றி வசைச் சொற்களுக்கு ஆளாக நேரிடும். எதிர்பாராத உதவிகளால் மேன்மையான சூழல் உண்டாகும். வழக்கு விவகாரம் சம்பந்தமான செலவுகள் உண்டாகலாம். பழைய கடன்களை திருப்பி அடைப்பீர்கள். பிறரின் பணிகளை சேர்த்து செய்யும் சூழல் உண்டாகும்.

 

மகரம் :

கூட்டாளிகளின் சுமூகமான முடிவுகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். மனதில் உள்ள கவலைகளால் ஏற்பட்ட சோர்வு நீங்கும். பிறரிடம் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகள் சாதகமான முடிவைத் தரும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்களின் பேச்சுக்கு மரியாதை உயரும். வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளால் லாபம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். எண்ணிய செயலை முடிப்பதற்கு சிறிது கடுமையாக முயற்சிக்க வேண்டும்.

 

கும்பம் :

புதிய உறுப்பினர்களின் வருகை உண்டாகும். சமூக சேவை புரிவோர்க்கு சாதகமற்ற சூழல் ஏற்படும். பணியில் உள்ளவர்களுக்கு பணி சம்பந்தமான கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். உயர்கல்வி பயில்வோரின் திறமைகளை வெளிப்படுத்த சாதகமற்ற சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் விலகி சென்றவர்கள் நெருங்கி வருவார்கள். இழுபறியான செயல்களால் அலைச்சலும், பதற்றமும் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். மறதியால் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.

 

மீனம் :

புதிய வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக் கூர்மை புலப்படும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட பணிகளில் சில விரயச் செலவுகள் உண்டாகும். புதுவிதமான தொழில்நுட்ப வித்தைகளை பயில முயல்வீர்கள். பிறரின் செயல்பாடுகளை குறை சொல்வதை தவிர்க்கவும். தந்தை பற்றிய கவலைகள் அதிகரிக்கும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் மரியாதைகள் அதிகரிக்கும். உறவினர்களால் கலகலப்பான சூழல் அமையும்.