மதில் வாயில் அமைக்கும் இடங்களும் அதற்குரிய பலன்களும்..!
வடக்கு
செல்வமும், மகிழ்ச்சியும் பல்கிப் பெருகும்.
வடகிழக்கு
செல்வமும், உடல் நலனும், சுகமும் பெருகும். பெண்களுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும் தரும். பெயரும், புகழும் தரும். ஆண் சந்ததி பெருகும். முன்னேற்றமும், அறிவும், இன்பமும் பெருகும். ஆண்களுக்கு அதிகாரமளிக்கும். குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமிக்கதாகும்.
கிழக்கு
முன்னேற்றமும், உடல் நலனும், சுகமும் பெருகும். பிரச்சனைகள் எதுவாயினும் சரியாகும். குழந்தைகள் பெற்றோரிடம் பகைகொள்வர். கெட்ட பெயர் ஏற்படுத்துவார். வீட்டை விட்டு ஓடிப் போவர். உடல் நலம் கெடும். திருட்டு, தீ விபத்து, பொருள் அழிவு ஆகியன ஏற்படும். வீட்டில் கெட்ட காரியங்கள் அடிக்கடி நடக்கும். வீட்டைக் காலி செய்ய வைக்கும். பெண்களுக்குச் சுகமும், மகிழ்வும் தரும். ஆண்களுக்கு முன்னேற்றம் தரும்.
தெற்கு
புகழ் தரும். பெண்களுக்கு நற்பலன்கள் தரும்.
தென்மேற்கு
செல்வம் குறையும். பெண் குழந்தைகளின் திருமணம் தள்ளிப்போகும். துன்பங்கள் பெருகும். அவப் பெயர் உண்டாகும். சிறைச் சாலைக்கும் செல்ல நேரும். இதய நோய், விபத்து, கொலை மூலம் அகால மரணம் நேரும். அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாக்கும். வீட்டில் கெட்ட காரியங்கள் அடிக்கடி நடக்கும்.
மேற்கு
முன்னேற்றமும், நலமும், புகழும், மகிழ்வும் தரும்.
வடமேற்கு
குடும்பத் தலைவனுக்கு அதிகாரமும், தன்னம்பிக்கையும், புகழும், பெருமையும் தரும். நலன்கள் பெருகும்.பிரச்சனைகள் பெருகும். வறுமை, வழக்கு, சபலம், சஞ்சலம் தரும். தெளிவற்ற முடிவுகள் எடுத்து அல்லல்படவைக்கும். குடும்பத்துடன் உறவு குறையும். குடும்பம் பிரியும். பெண்கள் நடைப்பிணமாவர். தொடர்ந்து தீய பலன்கள் தரும். குழந்தைகள் பெற்றோர் விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்து கொள்வர். குழந்தைகளுக்கு கெட்ட பெயர் உண்டாகும்.