தலைமுடியில் உள்ள பிரச்சனைகள் தீர வேண்டுமா

தலைமுடியில் உள்ள பிரச்சனைகள் தீர வேண்டுமா?

  1. செம்பட்டை முடி மாறுவதற்கு காலை உணவில் செம்பருத்தி பூ தோசையை சாப்பிட்டு வர குணமாகும்.
  2. தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தை போட்டு காய்ச்சி தினமும் தலைக்கு தடவி வர பொடுகு மறையும்.
  3. பொடுகு தொல்லை நீங்க வெந்நீரில் வேப்பிலையை போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் குளித்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதோடு கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது.
  4. தலையில் தயிராய் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து பின் குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.
  5. மிளகு எண்ணெய், தயிர், செம்பருத்தி பூ இவற்றை கொண்டு மசாஜ் செய்தாலும் பொடுகு தொல்லை நீங்கும்.
  6. கரிசலாங்கண்ணி கீரை, முட்டையின் வெள்ளை கரு, எலுமிச்சை சாறு, தயிர், துளசி, வேப்பிலை, தேயிலை நீர் இவற்றை பேக் போட்டால் பொடுகு தொல்லை நீங்கி கூந்தல் நன்றாக வளரும்.
  7. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணையில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி வடிகட்டி வைத்து பின் அதனை பயன்படுத்தி வந்தால் வழுக்கை விழுவதை தடுக்கலாம்.
  8. அரளிச் செடியினை கீறி பால் எடுத்து தடவி வர புழு வெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பலன் கிடைக்கும்.
  9. வாரத்தில் 3 நாட்கள் வெந்தயத்தை 10 கிராம் அளவு எடுத்து ஊறவைத்து அரைத்து தலையில் பூசி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் தலைக்கு குளித்து வர தலைமுடி நீண்டு கருமையாக வளரும்.
  10. முடி உதிர்வதை தடுக்க நெல்லிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.
  11. கருவேப்பிலையை துவையலாக செய்து உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள தலைமுடி உதிர்வது நிற்கும்.
  12. வல்லாரைத் தைலத்தை தினமும் காலையில் தலையில் தடவி வர தலைமுடி கறுப்பாகும்.
  13. தேங்காய் எண்ணையில் கரிசலாங்கண்ணி, பொன்னாங்கன்னி இலைகளை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வு நிற்கும்.
  14. வெந்தயத்தை இரவில் பாலில் ஊறவைத்து காலையில் அரைத்து, தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின் குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.
  15. இரண்டு எலுமிச்சை சாறு எடுத்து, ஒரு கப் தேயிலை நீரை சேர்த்து இவற்றுடன் சிறிதளவு நீரை கலந்து கூந்தலை கடைசியாக அலசும் போது உபயோகப்படுத்தினால் கூந்தலுக்கு மெருகு கிடைக்கும்.