மனையில் பாரம் சேர்த்தலும் பலன்களும்

மனையில் பாரம் சேர்த்தலும் பலன்களும்

 

மனையில் நிருதியில் பாரம் சேர்த்தல் நல்ல பலன்களைத் தரும். வலுவான மரங்கள் வைக்கலாம். மேல்நிலைத் தொட்டி அமைக்கலாம். குன்று போன்ற அமைப்புக்களும், மண் திட்டுக்களும் அமைக்கலாம். மனையின் தெற்கிலும், மேற்கிலும் பாரம் சேர்த்தல் நலம். வடக்கிலும், கிழக்கிலும், பாரம் சேர்த்தல் கூடாது. ஈசான்யத்தில் பாரம் கூடவே கூடாது. மிகத் தீய பலன்களைத் தரும். எனவே அங்கு செடிகளைக் கூட வளர்த்தல் கூடாது.

 

தெற்கு :

நற்பலன்கள் பெருகும். செல்வம் சேரும்.

தென்மேற்கு :

செல்வமும், உடல்நலனும், முன்னேற்றமும், புகழும், எல்லா நலன்களும் பல்கிப் பெருகும்.

மேற்கு :

நற்பலன்கள் பெருகும். உடல்நலனும், முன்னேற்றமும், புகழும் பெருகும்.

வடமேற்கு :

நற்பலன்கள் தராது.

வடக்கு :

தீய பலன்கள் தரும். உடல் நலனும், செல்வமும், அமைதியும், ஆயுளும் குறையும். பெண் சந்ததி இழப்பு ஏற்படும்.

வடகிழக்கு:

மிகத் தீய பலன்கள் தரும். சந்ததி அழியும். தெளிவற்ற அவசர முடிவுகள் எடுத்து அல்லல் பட வைக்கும். முன்னேற்றமும், உடல் நலனும், புகழும், அமைதியும், செல்வமும், ஆயுளும் எல்லா நலன்களும் குன்றும். அவமானம் ஏற்படும். பகை பெருகும். வறுமையும், இழிவும் ஏற்படும். வேலை வாய்ப்பும் குன்றும். விபத்து நடக்கும். இதய நோய் வரும். அகால மரணமும் ஏற்படும், வீட்டில் கெட்ட காரியங்கள் அடிக்கடி நடக்கும்.

கிழக்கு

தீய பலன்கள் தரும். முன்னேற்றமும், புகழும், அமைதியும் கெடும். உடல் நலனும், ஆயுளும் குறையும். ஆண் சந்ததி இழப்பு ஏற்படும்.

தென்கிழக்கு:

நற்பலன்கள் தராது.