சிம்ம லக்ன பொதுபலன்கள்

சிம்ம லக்ன பொதுபலன்கள்

 

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் நல்ல உயரமும், கம்பீரமான தோற்றமும், நல்ல நிறத்தையும் கொண்டிருப்பார்கள். குரூரமான குணநலன்கள் கொண்டிருப்பார்கள். தன் இஷ்டப்படி நடந்து கொண்டு அனைவரும் அவரைப் பின்பற்ற வேண்டும் என எண்ணுவார்கள். பண விசயத்தில் எச்சரிக்கையாக இருப்பார்கள். குறைவான ஏமாற்றங்களைச் சந்திப்பார்கள், நீதிக்காகவும், நியாயத்திற்காகவும் போராடுபவர்கள், எப்பொழுதும் பரபரப்பாகக் காணப்படுபவர்கள். உஷ்ண தேகம் கொண்டவர்கள், குற்றங்களை உடனே தட்டிக் கேட்பவர்கள், எந்தவொரு செயலைச் செய்வதற்கும் பிறரை எதிர்பார்க்க மாட்டார்கள்.

 

தானே முன்னின்று திறமையாகச் செயல்படுபவர்கள், சுதந்திர உணர்வு சற்று அதிகமாக காணப்படும். யாருக்கும் அடிபணிய மாட்டார்கள். திட்டங்களைகத் தீட்டுவதிலும் அவற்றை செயல்படுத்துவதிலும் திறமையானவர்கள். கடமை உணர்வு அதிகம் காணப்படும். எந்தக் காரியத்தையும் விரைந்து முடிக்க வேண்டும் என விரும்புவார்கள், இவர்களிடம் சாமர்த்தியமும், திறமையும், நுணுக்கமான அறிவும் நிறைந்திருக்கும் . பக்தி மான்களாகவும், சேவை மனப்பான்மை உடையவர்களாகவும் இருப்பார்கள்.

 

செயல்திறன் அதிகம், பேச்சாளர், கல்வி, சாஸ்திர ஞானம் கொண்டவர்கள். மனோதிடம் உண்டு , மனை, வாகன யோகம் பூரணமாகக் கிடைக்கும். ஆன்மிக விசயங்களில் நாட்டம் உண்டு, களத்திர ஒற்றுமையில்லை, குறைவான பயனில்லாத நண்பர்களைக் கொண்டவர்கள், ஆயுள் பலம் உண்டு உறவுகள் அனுசரனை கிடையாது, இருந்தாலும் பாக்கியம் சேரும். வேத விற்பன்னர், ஜவுளி, அலங்காரப் பொருட்கள், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக், சுரங்கம், ஆராய்ச்சிக் கூடம், மருத்துவர், அரசுப் பணி, டெக்ஸ்டைல், இயந்திரங்கள், டிராவல்ஸ் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், நீதித்துறை, சீருடை அணிந்து பணிபுரிதல், நகை, அரசியல், பேன்ஸி பொருட்கள், மர வேலை, இடைத்தரகர் போன்ற துறைகளில் ஈடுபடக்கூடியவர்கள்.