முதல் தரமான மனையின் சிறப்புகள்
- மனையின் தெற்கு, மேற்குப் பக்கங்களில் உயரமான குன்றுகள், மேடுகள்,கட்டிடங்கள் வருதல்.
- மனை சரியாக அமைந்து மனையின் நான்கு திசைகளிலும் சாலைகள் அமைந்திருத்தல்.
- மனைக்கு வடக்கு, கிழக்குடன் கூடிய மூன்று பகுதிகளில் சாலைகள் அமைந்திருத்தல்.
- மனைக்கு வடக்கு, கிழக்கு ஆகிய இருபுறங்களில் சாலைகள் இருத்தல்.
- மனைக்கு வடக்கு அல்லது கிழக்கில் சாலை அமைப்பு வருதல்.
- மனைக்குத் தெற்கு, மேற்குப் பக்கங்களில் உள்ள சாலைகள் மனையை விட உயரமாக இருத்தல்.
- மனைக்கு வடக்கு, கிழக்குப் பக்கங்களில் உள்ள சாலைகள் தாழ்ந்திருத்தல்.
- மனைக்கு மேற்கு, கிழக்குப் புறமுள்ள சாலைகள் வடக்கு நோக்கிச் சரிவாக இருத்தல்.
- மனைக்குத் தெற்கு, வடக்குப்புறமுள்ள சாலைகள் கிழக்கு நோக்கிச் சரிவு பெற்றிருத்தல்.
- மனைக்குத் தெருக்குத்தல் இருப்பின் அது வடக்கு, கிழக்கு, வடமேற்கு, மேற்கு ஆகிய உச்சப்பகுதிகளில் இருத்தல்.
- மனை சதுரம் அல்லது செவ்வக வடிவில் அமைந்திருத்தல்.
- மனை செவ்வக வடிவிலிருப்பின் அதன் நீளம் அகலத்தைவிட l 1/2 பங்குக்கு அதிகமாகவும் 2 பங்குக்கு மிகாமலும் இருத்தல்.
- மனை தென்மேற்கிலிருந்து வடகிழக்கு பகுதியை நோக்கி சரிவாக இருத்தல்.
- மனையின் மையப்பகுதியில் மேடோ, பள்ளமோ இல்லாதிருத்தல்.
- மனையின் நிருதி மூலை, மூலைமட்டத்திற்கு இருத்தல்.
- மனையின் வடகிழக்கு பகுதி அதிகமாக இருத்தல்.
- மனையின் வடகிழக்கு பகுதியை தவிர வேறு எந்த மூலைகளிலும் வளர்ச்சி இல்லாதிருத்தல்.
- மண்ணின் பாரம் தாங்கும் தன்மை அதிகமாக இருத்தல்.
- மனை இரண்டு பெரிய மனைகளுக்கு இடையில் அகப்பட்டு சிறிய மனையாக இல்லாதிருத்தல்.
- மனையின் எந்த பகுதியிலும் வெட்டிய அமைப்பு வாரதிருத்தல்.