பொதுவான ஆன்மிக தகவல்கள்
- விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை உதிர்த்து அதை நன்றாக காய விட்டு வியாழன், பௌர்ணமி அம்மாவசை அன்று தூபம் போட தீய சக்திகள் இருந்தால் விலகி ஓடும். இதை வியாபார இடத்திலும் செய்யலாம்.
- தொட்டா சிணுங்கி, முடக்கத்தான், துளசி, வில்வம், கத்தாழை போன்ற செடிகளை வீட்டில் வளர்த்தால் கண் படுதல் ,ஏவல் ,சூன்யம் ,வினைகள் போன்ற தீய சக்திகள் எளிதில் வீட்டிற்குள் வராது.
- வீட்டில் விக்ரகங்களை வைத்து வழிபாடு செய்பவர்கள் கறவை பசும் பால், தேங்காய் நீர், அரைத்த சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். மனிதனின் கை கால்கள் படாத நீரில் அல்லது பழசாறு இவைகளிலும் பண்ணலாம். இவைகள் இல்லை என்றால் செய்யாமல் இருங்கள்.
- மயில் தோகையை வீட்டில் வைத்து இருப்பதால் முருகனின் ஆசிகள் கிடைக்கும்.
- கோவில்களில் அபிஷேகத்திற்கு கறவை பசும் பால் மட்டும் தரவும், அல்லது இளநீரைத் தர வேண்டும். இவைகள் உங்கள் சந்ததி அனைவரின் பாபத்தையும் ,சாபத்தை போக்கும் வல்லமை உடையது.
- வெள்ளை மிளகு ,கடுகு ,காய்ந்த வில்வ இலைகள் ,நாய் கடுகு (மிளகு ) பால் சாம்பிராணி, கடுக்காய் ,காய்ந்த வேப்ப இலைகள் ,ஓமம், தான்றிக் காய் ,காய்ந்த மருதாணி இலை, மஞ்சள் இவைகளை நன்றாக கலந்து அம்மாவசை ,பௌர்ணமி ,வெள்ளிகிழமை போன்ற நாட்களில் தூபம் போடுவது சகல நன்மைகளை தரும், குல சாமிகளின் ஆசிகள் கிடைக்கும்.
- எந்த ஒரு நல்ல காரியம் துவங்க வெளியில் செல்லும் பொழுதும் அருகில் உள்ள விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைப்பதும், பசுவிற்கு வாழைப் பழம் தருவதும் துவங்கும் அக்காரியத்தை வெற்றியடைய செய்யும்.
- கொப்பரை தேங்காயை துண்டுகளாகி அதை தூபமாக பெருமாளுக்கு காண்பிக்க பெருமாளும் கருப்பு சாமியும் குலத்தை காப்பார்.
- ஒரே நாளில் 9 வகையான லிங்க மூர்த்திகளை தரிசனம் செய்ய சனி தேவரின் ஆசிகள் பெற்று, ஆயுள் தோஷம் நீங்கி ஆரோகியம் ஏற்படும்.
- பசு நெய்யை செப்புப் பாத்திரத்தில் நிறைத்து கோவிலுக்கு தர்மம் செய்தால் வம்ச சாபம் விலக வழிகளை தெரியப் படுத்தும்.