எதை கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்

எதை கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

 

பால்:

பால் கொண்டு அபிஷேகம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்

நல்லெண்ணெய் :

நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்தால் சுகத்தைக் கொடுக்கும்

பஞ்சகவ்யம் :

பஞ்சகவ்யம் கொண்டு அபிஷேகம் செய்தால் மனதைப் பரிசுத்தம் செய்யும் அதனால் தீய எண்ணங்கள் வராது.

பஞ்சாமிருதம் :

பஞ்சாமிருதம் கொண்டு அபிஷேகம் செய்தால் வெற்றியைத் தரும்

நெய் :

நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் மோட்சத்தைத் தரும்.

தயிர் :

தயிர் கொண்டு அபிஷேகம் செய்தால் மகப்பேறு தரும்.

கரும்புச் சாறு :

கரும்புச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் ஆரோக்யத்தைத் தரும்.நீண்ட நாட்களாக இருந்து வந்த நோயும் விலகும் என்பார்கள்.

தேன் :

தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் கலைவாணியின் அருளைப் பெற்றுத் தரும்.

பழரசம் :

பழரசம் கொண்டு அபிஷேகம் செய்தால் எம பயத்தை நீக்கும்

இளநீர் :

இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தால் உயர்ந்த பதவியைத் தரும்.

சந்தனம் :

சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் இறைவனோடு இரண்டறக் கலக்கச் செய்யும்.

கலசாபிஷேகம் :

கலசாபிஷேகம் கொண்டு அபிஷேகம் செய்தால் அஷ்டலக்ஷ்மி கடாக்ஷத்தைத் தரும்.

வஸ்திரம் :

நல்ல வஸ்திரம் கொண்டு அணிவித்து மரியாதை செய்தால் வறுமை நீங்கும்.