பூர்வீகத்தில் குடியேற தடை ஏற்படுகிறதா

பூர்வீகத்தில் குடியேற தடை ஏற்படுகிறதா?

வாஸ்து சாஸ்திரம் 

கேள்வி : ஐயா, வணக்கம் நாங்கள் எங்களுடைய பூர்வீகத்தை விட்டுவிட்டு தொழிலுக்காக சென்னை வந்துவிட்டோம். இப்போது பூர்வீகத்திற்கு போய்விடலாம் என்றால் ஜாதகத்தில் உங்களுக்கு பூர்வீகம் ஆகாது என்கிறார்கள். தயவு செய்து இந்த குழப்பத்தை தீர்த்து வையுங்கள்.

பதில் : அன்பு நண்பரே! உங்களுடைய கேள்விக்கு மிக்க நன்றி. இதோ உங்களுக்கான பதில்,

ஜாதக அமைப்பில் 9ம் இடம் பூர்வ புண்ணியம் என்று கூறுவார்கள். அதேபோல் தந்தை வழி சொந்தங்களையும், சொத்துக்களையும் குறிக்கக்கூடியது. இந்த 9ம் இடத்தில் உள்ள கிரக, நட்சத்திர தொடர்புகளை வைத்து ஒருவருக்கு பூர்வீகம் ஆகும், ஆகாது என்கிற பதிலை உங்களுடைய ஜாதகம் கூறும். அதேபோல் உங்களுடைய ஜாதகத்தில் 4ம் இடத்தில் உள்ள கிரக, நட்சத்திர தொடர்புகளை வைத்து ஒருவர் வாடகை வீட்டில் இருப்பாரா? கூரை வீட்டில் இருப்பாரா? ஓட்டு வீட்டில் இருப்பாரா? மாடிவீட்டில் இருப்பாரா? போன்ற விபரங்களை உங்களுடைய ஜாதகம் கூறும்.

அன்பு நண்பரே! நீங்கள் உங்களுடைய பூர்வீகத்தை விட்டுவிட்டு சென்னை போனதாக கூறினீர்கள். அதனால் நான் இங்கு குறிப்பிடும் படியான அமைப்புகள் உங்களது பூர்வீக வீட்டில் இருக்கக்கூடும்.

 

அவைகள் :

தென்மேற்கு தவறுகளான,

1. தென்மேற்கில் கிணறு, போர், சம்ப் போன்ற அமைப்புகள் வருவது

2. தென்மேற்கில் கழிவறை, மலக்குழிகள் வருவது

3. தெற்கு, மேற்கு பகுதியில் காம்பவுண்ட் இல்லாத அமைப்பு

4. தென்மேற்கு, தெற்கு முக்கிய வாசல்

5. தென்மேற்கில் Hall அமைப்புகள்

6. தென்மேற்கில் பூஜையறை வருவது

7. தென்மேற்கில் தெருக்குத்து, தெருப்பார்வை வருவது போன்றவைகள்

 

வடகிழக்கு தவறுகளான,

1. வடகிழக்கு முழுவதும் மூடிய அமைப்பில் இருப்பது

2. வடகிழக்கில் கழிவறை மலக்குழிகள் வருவது போன்ற அமைப்புகள்

3. வடகிழக்கில் சமையலறை, பூஜையறை வருவது

4. வடகிழக்கில் உயரமான அமைப்பில் தண்ணீர் தொட்டி வருவது

5. வடகிழக்கில் உள்பகுதி, வெளிப்பகுதி இருபக்கமும் மாடிப்படி அமைப்புகள் வருவது.

 

வடமேற்கு தவறுகளான,

1. வடமேற்கு, வடக்கு தெருக்குத்து, தெருப்பார்வை வருவது

2. வடமேற்கில் கிணறு, போர், சம்ப் போன்ற அமைப்புகள் வருவது

3. வடமேற்கில் உள்ள மூலையில் படி அமைப்புகள் வருவது

4. நான்கு புறமும் காம்பவுண்ட் இல்லாத அமைப்புகள்

5. தென்மேற்கு, மேற்கில் முக்கிய வாசல் அமைப்புகள் இருப்பது.

நான் மேற்குறிப்பிட்ட அமைப்புகள் உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடும். இந்த தவறுகளை சரி செய்யாவிட்டால் நீங்கள் பூர்வீக வீட்டிற்கு போவது கடினம். உங்களுடைய வீட்டை சரி செய்யும்போது உங்களுடைய வாழ்க்கையே மாற்றி அமைக்கப்படும்.