வடமேற்கு பகுதியின் நற்பலன்கள்

வடமேற்கு பகுதியின் நற்பலன்கள்

  1. தலைவாயில் மேற்கு , வடக்கு ஆகிய உச்சப் பகுதிகளிலேயே அமைத்தல் வேண்டும். மேற்கு, வடக்கு ஆகிய நீச்சப் பகுதிகளில் அமைத்தல் கூடாது.
  2. வாயில்களுக்கு நேர் எதிரில் கிணறு, ஆழ்துளைக் கிணறு, நிலத்தடி நீர் தொட்டி, மலக்குமி, சாண எரிவாயுக் குழி, மரம், கம்பம், தூண், மாடிப்படி தொட்டி, பாழடைந்த வீடு, எதிர்வீட்டு மதில் முனை ஆகியன இருத்தல் கூடாது.
  3. மேற்கில் தலைவாயில் அமைத்துத் தொடர்ந்து வாயில்கள் இருப்பின் அவசியம் கிழக்கில் துணை வாயில் அமைத்தல் வேண்டும்.
  4. வீட்டின் முன்புற வாயில் மட்டும் அமைத்து அத்துடன் சேர்ந்து 3 கதவுகள் ஒரே நேர்கோட்டில் வருவதைத்  தவிர்க்கவும்.
  5. இரண்டு தலைவாயில்கள் உச்சத்தில் அமைப்பதாயின் மேற்கிலும் கிழக்கிலும் அமைக்கலாம்.வடக்கிலும் தெற்கிலும் அமைக்கலாம். வடக்கிலும் கிழக்கிலும் அமைக்க கூடாது. வேறு அமைப்புகள் கூடாது.
  6. கூரையின் சரிவு வடக்கு, கிழக்குகளில் இருத்தல் வேண்டும். இருபக்கச் சரிவாயின் வடக்கு, கிழக்குகளில் சரிவு அதிகமாக இருத்தல் வேண்டும்.
  7. தென்மேற்கு பகுதியில் அமையும் வெளிக் கட்டிடங்களின் தளம் அப்பகுதிகளில் பிரதானக் கட்டிடத்தின் தளத்தை விடத் தாழக் கூடாது.
  8. பிரதானக் கட்டிடமும் வெளிக்கட்டிடங்களும் தரைக்கு மேல் குழாய் இணைப்புக்களால் கூட இணயக் கூடாது.
  9. மாட்டுத் தொழுவம் மனையின் வடமேற்கு பகுதியில் வடக்கு மதிலைத் தொடாமல் அமைத்தல் வேண்டும்.
  10. வீட்டிற்கு வெளியே சமையலறை, குளியலறை, கழிப்பறை, பணியாளர் குடியிருப்பு ஆகியனவற்றை தென்கிழக்கு அல்லது வடமேற்கு மூலையில், கிழக்கு அல்லது வடக்கு மதில் சுவரைத் தொடாமல் அமைத்தல் வேண்டும்.