தெரு நெருங்கல் மற்றும் அதற்குரிய பலன்கள்
நாம் குடியிருக்கும் தெருவில் மற்ற அனைத்து வீடுகளை விட நமது வீட்டின் மதில் சுவர் தெருவுக்கு நெருக்கமாயிருத்தல் தெரு நெருங்கல் எனப்படும். இதில் வடக்கு, கிழக்குத் தெரு நெருங்கல்கள் தன் பலன்களையும், தெற்கு, மேற்குத் தெரு நெருங்கல்கள் தீய பலன்களையும் தரும். தீய பலன்களைத் தவிர்க்க தெற்கு, மேற்குத் தெரு நெருங்கல்களுக்குக் காரணமான அம்மதில் சுவர்களை அடக்கிக் கட்ட வேண்டும்,
வடக்குத் தெருவை நெருங்கிய மனை, வீடு
கிழக்குத் தெருவை நெருங்கிய மனை, வீடு
தெற்குத் தெருவை நெருங்கிய மனை, வீடு
மேற்குத் தெருவை நெருங்கிய மனை, வீடு
தெரு நெருங்கல்களின் பலன்கள் :
வடக்குத் தெரு நெருங்கல் :
இது கிழக்கு,கிழக்கு, மேற்கு தெருக் குத்தல்களுக்கு உள்ளாவதால் மிக நல்ல பலன்களையும் தரும். குபேரசம்பத்து போன்ற பெரும் செல்வத்தையும், மேன்மையான பலன்களும் தரும்.
கிழக்குத் தெரு நெருங்கல் :
இது வடக்கு,கிழக்கு,தெற்கு தெருக் குத்தல்களுக்கு உள்ளாவதால் மிக நல்ல பலன்களைத் தரும். தெருவிலிருக்கும் அனைவரும் கட்டுப்படுவர்.கெளரவமும், மேன்மையான பலன்களும் தரும்.
தெற்குத் தெரு நெருங்கல் :
இது கிழக்கு,தென்மேற்கு,தெற்கு மற்றும் மேற்கு தெருக் குத்தல்களுக்கு உள்ளாவதால் மிகத் தீய பலன்களைத் தரும். ஆபத்து தருதல், வீட்டைக் காலி செய்ய வைத்தல் போன்ற தீய பலன்கள் தருமாதலால் உடனே மதில் சுவரை அடக்கிக் கட்ட வேண்டும்.
மேற்குத் தெரு நெருங்கல் :
இது தெற்கு, தென்மேற்கு, மற்றும் வடக்கு தெருக்குத்தல்களுக்கு உள்ளாவதால் மிகத் தீய பலன்களைத் தரும். துயரங்கள் மிகப் பெருகும். ஆபத்து தரும். எனவே உடனே மதில் சுவரை அடக்கிக் கட்ட வேண்டும்.