பாத வெடிப்பிலிருந்து விடுபட வேண்டுமா

பாத வெடிப்பிலிருந்து விடுபட வேண்டுமா?

 

தேங்காய் எண்ணெய் பாத வறட்சியை நீக்கி, குதிகால் வெடிப்பை மறைக்கும். அதற்கு தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி பாதங்களில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் பின்பற்றி வந்தால், உங்கள் பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக இருக்கும்.

வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பாத பிரச்சனைகள் விரைவில் அகலும்.

ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயில் கூட மாயங்களைச் செய்யும். அதற்கு இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயிலை குதிகால்களில் தடவி மசாஜ் செய்து , சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். இப்படி தினமும் செய்து வர மூன்றே நாட்களில் மாற்றத்தை நீங்கள் காணலாம்.

தினமும் இரவில் படுக்கும் முன் பாதங்களில் பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவி வந்தால், பாதங்களில் உள்ள வறட்சி நீங்கி , குதிகால் வெடிப்பும் மறைய ஆரம்பிக்கும்.

வாரத்திற்கு இரண்டு முறை வீட்டிலேயே பெடிக்யூர் செய்யுங்கள்.அதற்கு வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, சிறிது ஷாம்பு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அதில் கால்களில் 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். பின் கால்கள் உலர்ந்ததும், மாய்ஸ்சுரைசர் ஏதேனும் தடவ வேண்டும். இப்படி செய்வதால் குதிகால்களில் உள்ள இறந்த சருமம் வெளியேற்றப்பட்டு, வெடிப்பு நீங்கி, குதிகால் அழகாக இருக்கும்.