உத்திரட்டாதி நட்சத்திர குணாதிசியங்கள் !!
உத்திரட்டாதி :
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இராசி : மீனம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி : சனி
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு
பொதுவான குணங்கள் :
- எடுத்த செயலை முழுமையாக செய்து முடிக்கக் கூடியவர்கள்.
- செயல் தீரம் கொண்டவர்கள்.
- உடல் ஆரோக்கிய விஷயங்களில் மிகுந்த கவனம் கொண்டவர்கள்.
- எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடியவர்கள்.
- பிறரிடம் நேர்மையையும், உண்மையையும் எதிர்பார்க்கக்கூடியவர்கள்.
- நேர்மையால் மிகுந்த செல்வாக்கு உடையவர்கள்.
- மிகுந்த உறவினர்களை உடையவர்கள்.
- புறம் பேசும் குணம் உடையவர்கள்.
- நேர்மையானவர்கள்.
- பிறருக்கு உதவக்கூடியவர்கள்.
- கலைகளில் விருப்பம் கொண்டவர்கள்.
- பயணங்களில் விருப்பம் உடையவர்கள்.
- கல்வி ஞானத்தில் சிறந்தவர்கள்.
- குடும்ப தொழிலை விரும்பி செய்பவர்கள்.
- வழக்கை வாதாடுவதில் வல்லவர்கள்.
உத்திரட்டாதி முதல் பாதம் :
இவர்களிடம் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- திடமான மன தைரியத்தை கொண்டவர்கள்.
- எளிதில் முடிவை மாற்றக்கூடியவர்கள்.
- தான தர்மங்களில் விருப்பம் கொண்டவர்கள்.
- ரோமம் நிறைந்த உடல் உடையவர்கள்.
- செல்வாக்கு நிறைந்தவர்கள்.
- பேச்சுகளால் மற்றவர்களை கவரக்கூடியவர்கள்.
உத்திரட்டாதி இரண்டாம் பாதம் :
இவர்களிடம் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- வீராப்பு உடையவர்கள்.
- அமைதியானவர்கள்.
- சிறந்த குணவாளர்கள்.
- அழகிய நடை கொண்டவர்கள்.
- மதி நிறைந்தவர்கள்.
- ஆடம்பர பொருள்கள் மீது விருப்பம் உடையவர்கள்.
உத்திரட்டாதி மூன்றாம் பாதம் :
இவர்களிடம் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- உறுதியான தேகத்தை உடையவர்கள்.
- ஆன்மிக எண்ணம் நிறைந்தவர்கள்.
- கோபம் உடையவர்கள்.
- பிரச்சனைகளை உண்டு பண்ணக்கூடியவர்கள்.
உத்திரட்டாதி நான்காம் பாதம் :
இவர்களிடம் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- கற்பனையில் மன்னன்.
- எதிலும் நாட்டம் இல்லாதவர்கள்.
- குடும்பத்தின் மீது பற்று கொண்டவர்கள்.
- விவசாய பணியில் ஆர்வம் உடையவர்கள்.