திதிகள்

திதிகள்

திதி என்பது ஆகாயத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள கம். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள்.

பௌர்ணமி அன்று இருவரும் நேர் எதிராக அதாவது 180 பாகை தூரத்தில் இருப்பார்கள். அதாவது சூரியன் இருக்கும் ராசியில் இருந்து ஏழாவது ராசியில்

சந்திரன் இருப்பார்.

சூரியனிலிருந்து ஒவ்வொரு நாளும் சந்திரன் எவ்வளவு தூரம் விலகிச் சென்று உள்ளார் என்பதைக் குறிப்பதே திதியாகும். ஒரு திதிக்கு 12 பாகையாகும். இந்த திதி என்ற வடமொழிச் சொல்லே திரிந்து தேதி என்று வழங்கலாயிற்று. அமாவாசை அன்று சேர்ந்திருக்கும் சூரியனும் சந்திரனும் பிரதமை அன்று பிரிந்து பின்னர் மீண்டும் சேருவதற்கு 30 நாட்களாகும். இந்த 30 நாட்களும் 30 திதிகளாகும். இந்த 30 திதிகளில் பெளர்ணமிக்கும் அமாவாசைக்கும் மட்டுமே பெயர் உண்டு. மற்றவைகள் ஒன்று, இரண்டு, மூன்று என வடமொழிச் சொல்லால் அழைக்கப்படுகின்றன. வடமொழிச் சொல்லிலிருந்து இவைகளுக்கு பெயர்கள் எப்படி உண்டானது என்ற விபரம் இங்கே தரப்பட்டுள்ளது.

ஏகம் (ஒன்று) – பிரதமை

துவந்தம் (இரண்டு) – துவிதியை

திரயம் (மூன்று) – திருதியை

சதுர் (நான்கு) – சதுர்த்தி

பஞ்சமம் (ஐந்து) – பஞ்சமி

ஷட் (ஆறு) – சஷ்டி

சப்த (ஏழு) – சப்தமி

அஷ்ட (எட்டு) – அஷ்டமி

நவம் (ஒன்பது) – நவமி

தசம் (பத்து) – தசமி

 

வளர்பிறை திதிகளும், தேய்பிறை திதிகளும் ஒரே பெயராலே அழைக்கப்படுகின்றன.

1. பிரதமை 2. துவிதியை 3. திருதியை 4. சதுர்த்தி 5. பஞ்சமி   6. சஷ்டி    

7. சப்தமி   8. அஷ்டமி    9. நவமி     10. தசமி   11. ஏகாதசி   12. துவாதசி

13. திரயோதசி 14. சதுர்த்தசி 15. அமாவாசை (அ) பெளர்ணமி

வடநாட்டில் இந்த முப்பது திதிகள் கொண்டதே ஒரு மாதமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. திதிகளில் துவிதியை, திருதியை, பஞ்சமி, தசமி, திரயோதசி மற்றும் சதுர்த்தசி ஆகிய திதிகள் சுப திதிகளாகவும்.

சஷ்டி, சப்தமி, ஏகாதசி, துவாதசி மற்றும் பெளர்ணமி ஆகிய திதிகள் மத்திமமான திதிகளாகவும். பிரதமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி மற்றும் அமாவாசை ஆகிய திதிகள் அசுப திதிகளாகவும் அமைகின்றன.