ராசிகளும் அதற்குரிய நிறங்களும்

ராசிகளும் அதற்குரிய நிறங்களும்

 

சிம்ம ராசி

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசி அன்பர்கள் ரத்த சிவப்பு நிற ஆடையை அணியலாம். ரத்த சிவப்பு நிறம் நன்மையை செய்யும்.

கடக ராசி

சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த கடக ராசி அன்பர்கள் முத்து வெண்மை ஆடைகளை அணிந்தால், அது அவர்களுக்கு நன்மையை செய்யும். முத்து வெண்மை கடக ராசிக்கு நன்மையை செய்யும்.

மேஷம் மற்றும் விருச்சிக ராசி

செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த மேஷம் மற்றும் விருச்சிக ராசி அன்பர்கள் பவள நிற ஆடையை அணிவது நன்மை செய்யும். அதே போல பவள நிறம் நன்மையை செய்யும்.

மிதுனம் மற்றும் கன்னி ராசி

புதனின் ஆதிக்கத்தில் பிறந்த மிதுனம் மற்றும் கன்னி ராசி அன்பர்கள் பச்சை நிற ஆடையை அணியலாம். அதே போல பச்சை நிறம் அவர்களுக்கு நன்மையை செய்யும்.

தனுசு மற்றும் மீன ராசி

குருவின் ஆதிக்கத்தில் பிறந்த தனுசு மற்றும் மீன ராசி அன்பர்களுக்கு மஞ்சள் நிற ஆடைகள் நன்மையை செய்யும்

துலாம் மற்றும் ரிஷப ராசி

சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த துலாம் மற்றும் ரிஷப ராசி அன்பர்களுக்கு பட்டு வெண்மை அல்லது பட்டுப் போன்ற வெண்மை நன்மையை செய்யும். இதே பட்டு போன்ற வண்ணம் கூட நன்மையை செய்யும்.

மகரம் மற்றும் கும்ப ராசி

சனியின் ஆதிக்கத்தில் பிறந்த மகரம் மற்றும் கும்ப ராசி அன்பர்களுக்கு நீல நிறம் நன்மையை செய்யும்.