கட்டி கொண்டிருக்கும் வீடு பாதியில் நிற்க என்ன காரணம்?
கேள்வி : நாங்கள் ஜாதகம் பார்த்துதான் நான்கு வருடங்களுக்கு முன்பு வீடு கட்ட ஆரம்பித்தோம். ஆனால், வீட்டின் வேலை பாதியில் நின்றுவிட்டது. நான் தற்சமயம் வேலை இல்லாமல் இருக்கிறேன். கடன் சுமை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. எனக்கு உதவமுடியுமா, ஐயா?
பதில் : அன்பு நண்பரே! கவலை வேண்டாம். மனித வாழ்வில் இன்பம், துன்பம் இரண்டுமே நிரந்தரமானது கிடையாது. பகலும், இரவும் போல் மாறிக் கொண்டே இருப்பது தான் மனித வாழ்க்கை.
உங்களுடைய ஜாதகரீதியாக குரு திசை, குரு புத்தி இதுபோல ஏதாவது ஒரு காலகட்டத்தில் தான் நீங்கள் வீடு கட்ட ஆரம்பித்து இருப்பீர்கள். அந்த திசையோ, அந்த புத்தியோ முழுமையாக அனுபவிக்க யோகம் இருந்தால் மட்டுமே உங்களுடைய வீடு முழுமையாக கட்டி முடிக்கப்படும்.
ஒரு சிலருக்கு குரு திசை, குரு புத்தியானது 25மூ பலனை கொடுத்துவிட்டு மீதம் அனுபவிக்க முடியாதது போல் ஜாதக அமைப்புகள் இருக்கும். அதனால் தான் பல பேருடைய வீடு பாதியில் கட்டி முடிக்காமல் நிற்கிறது.
வாஸ்து தவறுகள் :
1. நல்ல நாளில் பூமி பூஜை போடாதது.
2. சரியான பிளான் இல்லாதது.
3. தவறான இடத்தில் வீடு கட்ட ஆரம்பிப்பது.
4. தவறான தெருக்குத்து, தெருப்பார்வை உள்ள இடத்தில் ஆரம்பிப்பது.
5. இயற்கையிலேயே பூமி அமைப்பு உங்களுக்கு சாதகமாக இல்லாமல் இருப்பது.
6. பக்கத்து வீட்டின் அமைப்புகள், கிணறு, போர், செப்டிக்டேங் போன்றவற்றின் பாதிப்புகளை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு அவைகள் நம்மை பாதிக்காமல் இருப்பதற்கு உண்டான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் வீடு கட்ட ஆரம்பிப்பது.
7. நம் வீட்டின் அருகில் தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு ஆகிய பகுதிகளில் 100 மீட்டர் தொலைவிற்குள் ஆறு, ஓடை, குளம், குட்டை போன்ற ஊருக்கு பொதுவான நீர் நிலைகளின் பாதிப்பை கவனத்தில் எடுத்துக்கொள்ளாதது.
8. உங்களுடைய கட்டிட அமைப்பில் வடகிழக்கு முழுவதும் மூடியும்,
- வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உயரமான கட்டிட அமைப்பும்,
- வடகிழக்கில் படி போன்ற அமைப்புகளும்,
- வடக்கை விட தெற்கு அதிக காலியிடமும்,
- கிழக்கை விட மேற்கு அதிக காலியிடமும்
என இதுபோன்ற இன்னும் குறிப்பிடும்படியான பல தவறுகள் உண்டு. அதுபோல கட்டிடங்களை நீங்கள் கட்ட முற்படும்போது கூட பாதியில் தடை ஏற்பட்டு நின்றுவிடும்.
நீங்கள் குடியிருக்கும் வீடும், நீங்கள் கட்டக்கூடிய வீடும் இரண்டுமே தவறாக இருக்கும் பட்சத்தில் இருமடங்காக நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். 82205-44911