மகரம் மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாக என்ன தொழில் செய்யலாம்

 

மகரம் மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள்  பொதுவாக என்ன தொழில் செய்யலாம்?

முயற்சி இருந்தால் எந்த ஒரு தொழிலும் சாதனையை படைக்கலாம். 'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்' என்கிறது ஆன்றோர் மொழி. எனினும், எனது சொந்த லக்னப்படி நான் என்ன தொழில் செய்யலாம்? அல்லது செய்தால் ஓரளவு வெற்றி பெற முடியும்? என்று கேட்பவர்களுக்காக நான் லக்ன அடிப்படையில் சில தொழில் ஆலோசனைகளை அளித்து உள்ளேன். உங்கள் சொந்த ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான பத்தாம் இடம் நன்றாக வலுப்பெற்று இருக்கும் பட்சத்தில் தாராளமாக கீழ்கண்ட தொழில்களை நீங்கள் செய்யலாம். அந்த விவரங்கள் வருமாறு…

 

சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த மகரம் மற்றும் கும்ப லக்ன காரர்கள்

இரும்பு,

இரும்பு சம்மந்தப்பட்ட தொழில்கள்,

எள்,

நல்லெண்ணெய் வியாபாரம்,

தோல் வியாபாரம்,

தரகர்கள்,

மர வியாபாரம்,

கசாப்புக் கடை,

அழுகும் பொருள்கள் சம்மந்தமான வியாபாரம் (காய்க்கறிக் கடை, முட்டை ,

இறைச்சி வியாபாரம்,

கால் நடைகள் உற்பத்தி,

மறு சுழற்சி தொழில்,

மருந்தாளர்,

பொறியியல் துறை ,

பட்டாசுக் கிடங்கில் வேலை

போன்ற மேற்கண்ட தொழில் அல்லது உத்யோகம் பார்த்தால் நல்லது.