வீட்டில் வரக்கூடாத சில தவறான அமைப்புகள்
- மனைவி மற்றும் குடும்பத்தில் உள்ள பெண்கள் கர்ப்பமாயிருக்கும் போது பணிகள் துவங்குதல்.
- மனையின் தென்மேற்கில் நிலத்தடி நீர்த்தொட்டியும், வடகிழக்கில் தற்காலிகக் கொட்டகையும், வடக்கிலும், கிழக்கிலும் சாமான்கள் சேகரிப்பும் செய்து கொண்டு தென்மேற்கு பகுதியில் முதலில் கடைகால் எடுத்துப் பணிகள் துவங்கல்.
- மனைக்கு மதில் சுவர் இல்லாதிருத்தல்.
- தெற்கு, மேற்கு மதில் சுவர்கள், வடக்கு, கிழக்கு மதில் சுவர்களை விட உயரம் குறைவாக இருத்தல்.
- வடக்கு, கிழக்கு மதில் சுவர்கள் மேல் கம்பிவேலி அமைத்துக் கொடிகளைப் படரவிடல், வடக்கு, கிழக்கு மதில் சுவர்கள் மேல் தொட்டிகள் அமைத்தல்.
- மற்ற மனைகளை விட நமது மனையின் தெற்கு, மேற்கு மதில் சுவர்கள் தெருவை நெருங்கி இருத்தல்.
- மதில் வாயில்கள் நீச்சத்தில் அமைத்தல்.
- மதில்வாயில், தலைவாயில் மற்றும் இதர வாயில்களுக்கு நேர் எதிரில் கிணறு, ஆழ்துளைக்கிணறு, நிலத்தடி நீர்த்தொட்டி, குழி, நீச்சல் குளம், கம்பம், தூண், மரம், மாடிப்படி, கழிப்பறை, அடுப்பு, குப்பைத்தொட்டி, பாழடைந்த வீடு, எதிர்வீட்டு மூலை ஆகியன இருத்தல்.
- மழை நீர் மனையின் வடகிழக்கு பகுதிக்கு செல்லாமல் தென்மேற்கு பகுதிக்குச் செல்லல்.
- கழிவு நீர் மனையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அல்லது தெற்கு, மேற்கு உச்சப் பகுதிகளில் வெளியேறாமல் மற்ற பகுதிகளில் வெறியேறல்.
- காலியிடம் தெற்கு, மேற்குப் பகுதிகளில் அதிகமாகவும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் குறைவாகவும் இருத்தல்.