மகா விஷ்ணுவின் 16 பெயர்கள்
யார் என்னை எந்த பெயரால் அழைத்தாலும் அவர்களை அவ்வாறே ஏற்றுக்கொண்டு ஆசிர்வதிப்பார் . என்பதால் தான் மகா விஷ்ணுவிற்கு 16 பெயர்கள் கூறப்படுகின்றன.
- மருந்தை உட்கொள்ளும் பொழுது அவனை அழைத்தால் – விஷ்ணு
- உணவை உட்கொள்ளும் பொழுது அவனை நினைத்தால் – ஜானர்த்தனன்
- படுக்கச் செல்லும் பொழுது அவனை நினைத்தால் – பத்மநாபன்.
- திருமணத்தின் பொழுது அவனை நினைத்தால் – பிரஜாபதி.
- யுத்தம் செய்யும் பொழுது அவனை நினைத்தால் – சத்ரதாரி.
- வெளியில் கிளம்பும் பொழுது அவனை நினைத்தால் – திரிவிக்ரமன்.
- நண்பனாய் அவனைப் பார்க்கும் பொழுது – ஸ்ரீ தரன்.
- கெட்ட கனவு காணும் பொழுது அவனை நினைத்தால் – கோவிந்தன்.
- கஷ்டம் வரும் போது , அவனை அழைத்தால் – மதுசூதனன்.
- காடுகளில் செல்லும் பொழுது நரசிம்மனாக தம்மை அண்டியவர்களைக் காப்பவன் ,
- நெருப்பால் துன்பம் வரும் பொழுது, அவனை நினைத்தால் அவனே – ஸ்ரீ மகாவிஷ்ணு ,
- தண்ணீரால் துன்பம் ஏற்படும் பொழுது அவனை நினைத்தால் அவனே – ஸ்ரீ வராகன்,
- ஆபத்தான மலையின் மீது ஏறும் சமயத்தில் அவன் நாமத்தை நினைக்கும் பொழுது அவனே – ஸ்ரீ ராமன்,
- நடக்கும் பொழுது உள்ளத்தால் அவன் பாதம் பற்றினால் அவனே – வாமனன்,
- இறக்கும் தருவாயில் அவன் நமக்கு – நாராயணன்,
- எல்லாச் சமயங்களிலும் பக்தனுக்கு அருள ஓடோடி வருவதில் அவன் – மாதவன்.