ஒரு வீட்டின் அமைப்பில் எந்த பகுதி உயரமாக இருந்தால் நன்மை உண்டாகும்

ஒரு வீட்டின் அமைப்பில் எந்த பகுதி உயரமாக இருந்தால்

நன்மை உண்டாகும்

ஒரு வீட்டு அமைப்புகளில் எந்த பகுதி உயரமாக இருந்தால் நன்மை மற்றும் எந்த பகுதி உயரமாக இருந்தால் தீமை என்பதை பற்றி பார்ப்போம்.

வீட்டின் வடக்கு பகுதியில் உயரமான கட்டிடம் வரும் போது பெண்களின் உடல் நலம் பாதிக்கப்படும். அது மட்டுமின்றி வறுமை உண்டாகும்.

 

வடகிழக்கு மூலையில் மிக பெரிய கட்டிட அமைப்பு வரும் போது வேலைவாய்ப்பு,உடல்நலம், புகழ்,பெருமை, செல்வம் அனைத்தும் பாதிக்கப்படும்.

 

வீட்டின் கிழக்கு பகுதியில் உயரமான கட்டிடம் வரும் போது ஆண்களின் முன்னேற்றம்,புகழ் ,நிம்மதி போன்றவை கெடும்.

 

தென்கிழக்கு பகுதியில் தென்மேற்கு பகுதியை விட உயரமாக வரும் பொழுது பிரச்சனைகள் பெருகும்.

 

வீட்டின் தெற்கு பகுதியில் உயரமான அமைப்பு வரும் போது பெண்கள் பெரிதும் பாதிக்கபடுவார்கள்.

 

தென்மேற்கு மூலை உயரமாக இருக்கும் போது செல்வ வளம் பெருகும்,புகழ், பெருமை உண்டாகும்.

 

மேற்கு பகுதி உயரமாக இருக்கும் போது குழந்தைகளின் வளர்ச்சி பெருகும்.

 

வடமேற்கு மூலையானது  தென்கிழக்கு பகுதியை விட தாழ்வாக இருப்பது சிறப்பை தரும்.