வடகிழக்கு பகுதியின் மனை மற்றும் வீட்டு அமைப்புகள்

வடகிழக்கு பகுதியின் மனை மற்றும் வீட்டு அமைப்புகள்

 

 

  1. மனையின் வடகிழக்கில் மட்டும் வளர்ச்சி இருக்கலாம்.

 

  1. மனையின் எந்தத் திசையிலும் வெட்டு இருத்தல் கூடாது.

 

  1. மனை தென்மேற்கிலிருந்து வடகிழக்கிற்குச் சரிவாக இருத்தல் வேண்டும்.

 

  1. மழைநீர் வடகிழக்கு அல்லது கிழக்கில் வெளியேற வேண்டும். '

 

  1. மதில் சுவர்கள் தெற்கிலும் மேற்கிலும் உயரமாகவும், வடக்கிலும் கிழக்கிலும் சற்று உயரம் குறைவாகவும்  இருத்தல் வேண்டும். மாறுதலாக இருத்தல் கூடாது.

 

  1. மதில் சுவரின் வடகிழக்கிலும், தென்மேற்கிலும் வெட்டோ , வளைவோ கூடவே கூடாது.

 

  1. மனையின் தென்மேற்கு, தெற்கு, மேற்குப் பகுதிகள் தவிர வேறு எங்கும் மேடுகளும், பாரங்களும் இருத்தல் கூடாது.

 

  1. தலைவாயில் வடக்கு ஈசான்யம், கிழக்கு ஈசான்யம் ஆகிய உச்சப் பகுதிகளிலேயே அமைத்தல் வேண்டும்.

 

  1. மலக்குழி, சாண எரிவாயுக் குழி மற்றும் நிலத்தடி, தான்யக் கிடங்குகள், மழைநீர் சேகரிப்புத் தொட்டி ஆகியன மனையின் நேர் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இருத்தல் வேண்டும்.

 

  1. மேல் நிலைத்தொட்டி மனை அல்லது கட்டிடத்தின் தென்மேற்கு, தெற்கு, மேற்குப் பகுதிகளில் இருத்தல் வேண்டும்.

 

  1. மரங்கள் மனையின் தென்மேற்கு , தெற்கு, மேற்குப் பகுதிகளில் இருத்தல் வேண்டும்.

 

  1. கிணறு, ஆழ்துளைக் கிணறு, நிலத்தடி நீர்த்தொட்டி, நீச்சல் குளம் ஆகியன மனையின், வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளிலேயே இருத்தல் வேண்டும்.