பூராட நட்சத்திர குணாதிசியங்கள் !!
பூராடம் :
பூராட நட்சத்திரத்தின் இராசி : தனுசு
பூராட நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன்
பூராட நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு
பொதுவான குணங்கள் :
- மனதிற்கு பிடித்தமான உணவு வகைகளை
- ருசித்து சாப்பிடுவார்கள்.
- சிறந்த நிர்வாகி.
- உயரமானவர்கள்.
- அரசருக்கு தோழன்.
- உயர்ந்த பதவியில் பணிபுரிபவர்கள்.
- தாய்க்கு விருப்பமானவர்கள்.
- தன்னை சார்ந்தவர்களை பேணிகாப்பவர்கள்.
- அழகு உடையவர்கள்.
- பரந்த மனம் உடையவர்கள்.
- பொய் உரைக்காதவர்கள்.
- பயணங்களில் விருப்பம் உடையவர்கள்.
- பெண்களுக்கு விரும்பமானவர்கள்.
- தர்ம சிந்தனை உடையவர்கள்.
- சுக போகங்களை அனுபவிப் பதில் விருப்பம் உடையவர்கள்.
- செல்வாக்கு நிறைந்தவர்கள்.
- மிக கடுமையாகப் பேசும் குணம் கொண்டவர்கள்.
- வாக்குவாதங்களில் விருப்பம் உடையவர்கள்.
- பொறுமையாக இருந்து காரியத்தை சாதிக்கும் திறமை உடையவர்கள்.
- முடிவு எடுப்பதில் வல்லவர்கள்.
- மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கக் கூடியவர்கள்.
பூராடம் முதல் பாதம் :
இவர்களிடம் பூராட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்கள்.
- செயல் திண்ணம் உடைய சிறந்த உழைப்பாளிகள்.
- உயர்ந்த குணம் உடையவர்கள்.
- பலசாலிகள்.
- சண்டைப் பிரியர்கள்.
பூராடம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் பூராட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- இரக்க குணம் கொண்டவர்கள்.
- உதவும் மனப்பான்மை உடையவர்கள்.
- இறைவழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள்.
- இனிமையான பேச்சுகளை கொண்டவர்கள்.
- அழகான தோற்றம் கொண்டவர்கள்.
- சகல சௌபாக்கியங்களும் உடையவர்கள்.
- தனிமையை அதிகம் விரும்பக்கூடியவர்கள்.
பூராடம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் பூராட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- ஆடம்பர வாழ்வுக்காக எதையும் செய்யக் கூடியவர்கள்.
- ஒழுக்கம், நேர்மை குணம் உடையவர்கள்.
- எதிலும் முன்ஜாக்கிரதை உடையவர்கள்.
- செல்வம் கொண்டவர்கள்.
- இளமையில் தாயின் பிரிவால் வாடுபவர்கள்.
- உடல் பலவீனம் உடையவர்கள்.
- தெளிவான சிந்தனை உடையவர்கள்.
பூராடம் நான்காம் பாதம் :
இவர்களிடம் பூராட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- கோபமும் வெறியும் உடையவர்கள்.
- பிறரை அடக்கி ஆள விரும்புபவர்கள்.
- தலைமை குணம் மிகுந்திருக்கும்.
- எளிதில் மற்றவர்களுடன் பழகமாட்டார்கள்.
- தங்களின் காரியத்தைச் சாதிக்க எதையும் செய்யக்கூடியவர்கள்.
- அறிவுரைகளை விரும்பாதவர்கள்.
- தேக வலிமை உடையவர்கள்.