வீட்டின் தென்கிழக்கு மூலையின் அமைப்புகள்

வீட்டின் தென்கிழக்கு மூலையின் அமைப்புகள்

 

  1. வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கதவு, ஜன்னல்களை அமைப்பது சிறப்பு.

 

  1. வடகிழக்கு மூலையில் போர்டிகோ அமைப்பு வருவது மிகவும் நல்லது.

 

  1. வீட்டின் மாடிப்படிகள் தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு பகுதிகளில் அமைக்கலாம்.

 

  1. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தாழ்வாரம், பால்கனி வருவது சிறப்பை தரும்.

 

  1. கட்டிடம் அமைக்கும் போது தென்மேற்கு பகுதி உயரமாகவும்,வடகிழக்கு தாழ்வாகவும் இருத்தல் வேண்டும்.

 

 

  1. கூரைகள் அமைக்கும் போது கூரையின் சரிவு வடக்கு மற்றும் கிழக்கு முகமாக அமைத்தல் வேண்டும்.

 

  1. இருபக்கச் சரிவாயின் வடக்கு, கிழக்குகளில் சரிவு அதிகமாக இருத்தல் வேண்டும்.

 

  1. தென்மேற்கு பகுதியின் வெளிக் கட்டிடங்களின் தளமானது அப்பகுதிகளில் உள்ள பிரதானக் கட்டிடத்தின் தளத்தை விடத் தாழ்வாக இருக்க கூடாது.

 

 

  1. மாட்டுத் தொழுவம் மனையின் வடமேற்கு மூலையில் வடக்கு மதிலைத் தொடாமல் அமைத்தல் வேண்டும்.

 

 

  1. வீட்டிற்கு வெளியே சமையலறை, குளியலறை, கழிப்பறை, பணியாளர் குடியிருப்பு போன்றவை அமைக்கும் போது  தென்கிழக்கு அல்லது வடமேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு மதில்களைத் தொடாமல் அமைத்தல் வேண்டும்.

 

  1. மின் இணைப்பு, மோட்டர் அறை, மின் உற்பத்தி இயந்திர அறை ஆகியன தென்கிழக்கு மூலையில் வருவது சிறப்பு.

 

  1. அலமாரிகள், துணிப் பெட்டிகள், பீரோக்கள், பணப்பெட்டிகள், பாரமான சாமான்கள், சோபா, நாற்காலிகள், மின் சாதனங்கள் போன்ற அமைப்புக்கள் அனைத்தும் பொது விதிகட்கு ஒப்பவே இருத்தல் வேண்டும்.