உங்கள் கூந்தல் அழகு பெற வேண்டுமா

உங்கள் கூந்தல் அழகு பெற வேண்டுமா?

  1. தினமும் தேங்காய் பால் தடவி குளித்து வந்தால் படிப்படியாக செம்பட்டை நிறம் மாறும்.
  2. செம்பட்டை முடி மாறுவதற்கு காலை உணவில் செம்பருத்தி பூ தோசையை சாப்பிட்டு வர குணமாகும்.
  3. தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தை போட்டு காய்ச்சி தினமும் தலைக்கு தடவி வர பொடுகு மறையும்.
  4. நாட்டு வெங்காயத்தை உரித்து அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊர வைத்து குளித்தால் பொடுகு நீங்கும்.
  5. பொடுகு தொல்லை நீங்க வெந்நீரில் வேப்பிலையை போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் குளித்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதோடு கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது.
  6. இலந்தை இலையை அரைத்து அதன் சாறை வழுக்கை உள்ள இடத்தில் தடவி வந்தால் நல்ல பலனை காணலாம்.
  7. அதிமதுரத்தை எருமைபாலில் அரைத்து வாரத்திற்கு மூன்று முறை தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
  8. தலைச்சூட்டிற்கு தயிர் குளியல் மிகச்சிறந்த மருந்து.
  9. வாரத்தில் 3 நாட்கள் வெந்தயத்தை 10 கிராம் அளவு எடுத்து ஊறவைத்து அரைத்து தலையில் பூசி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் தலைக்கு குளித்து வர தலைமுடி நீண்டு கருமையாக வளரும்.
  10. முடி உதிர்வதை தடுக்க நெல்லிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.
  11. கருவேப்பிலையை துவையலாக செய்து உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள தலைமுடி உதிர்வது நிற்கும்.
  12. வல்லாரைத் தைலத்தை தினமும் காலையில் தலையில் தடவி வர தலைமுடி கறுப்பாகும்.