தென்கிழக்கு மூலையின் சிறப்புகள்

தென்கிழக்கு மூலையின் சிறப்புகள்

                                                    

தொடர்ச்சி….

  1. மனையின் வடக்கு மற்றும் கிழக்குத் திசைகளில் மலக்குழி, சாண எரிவாயுக்குழி, நிலத்தடி தான்யக் கிடங்குகள், மழைநீர் சேகரிப்புத் தொட்டி போன்ற அமைப்புகள் வருவது சிறப்பு.மேலும் வாயில்களுக்கு நேர் எதிரில் இருத்தல் கூடாது.

 

  1. மேல் நிலைத்தொட்டியானது மனை அல்லது கட்டிடத்தின் தென்மேற்கு, தெற்கு, மேற்குப் பகுதிகளில் இருத்தல் வேண்டும். வடகிழக்கு மூலையில் அமைப்பதை தவிர்க்கவும்.

 

  1. மரங்கள் மனையின் தென்மேற்கு, தெற்கு, மேற்குப் பகுதிகளில் இருத்தல் வேண்டும். செடிகள் மனையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இருத்தல் வேண்டும்.

 

  1. வடகிழக்கு பகுதியில் செடிகள் வளர்ப்பதை தவிர்ப்பது நல்லது. மனையின் தென்கிழக்கு பகுதியில் சிவப்பு மலர் தரும் செடிகளும், வடக்கில் மஞ்சள் மலர் தரும் செடிகளும் வளர்க்க கூடாது.

 

  1. மனையின் தெற்கு பகுதியை விட வடக்கு பகுதியிலும், மேற்கு பகுதியை விட கிழக்கு பகுதியிலும் காலியிடம் அதிகமாக இருக்குமாறு கட்டிடம் கட்ட வேண்டும்.

 

  1. மனையின் வடகிழக்கு, வடக்கு, கிழக்கு பகுதிகள் தவிர வேறு எங்கும் பள்ளங்கள் இருத்தல் கூடாது.

 

  1. மனையின் தென்மேற்கு, தெற்கு, மேற்குப் பகுதிகள் தவிர வேறு எங்கும் மேடுகளும், பாரங்களும் இருத்தல் கூடாது. குப்பையும் கொட்டக் கூடாது.

 

  1. மனையின் வடகிழக்கு, தென்கிழக்கு , வடமேற்கு மூலைகள் மூடப்படக் கூடாது. தென்மேற்கு மூலை மூடப்படலாம். ஆனால் அப்பகுதியை ஒட்டிப் பக்கத்து மனையில் கிணறோ, ஆழ்துளைக் கிணறோ, நிலத்தடி நீர்த்தொட்டியோ, கட்டிடமோ கூடாது.

 

  1. எந்தத் திசையிலும் கட்டிடத்தில் வெட்டோ, வளர்ச்சியோ இருத்தல் கூடாது.

 

  1. தலைவாயில் கிழக்கு வடகிழக்கு , தெற்கு அக்னி ஆகிய உச்சப் பகுதிகளிலேயே அமைத்தல் வேண்டும். 82205-44911