தென்கிழக்கு மூலையின் நற்பலன்கள்
- கிழக்குச் சாலை சரிவாகவும் தெற்கிலிருந்து வடக்கு சரிவாகவும், தெற்குச் சாலை உயரமாகவும் மேற்கிலிருந்து கிழக்கு சரிவாகவும், இருத்தல் வேண்டும்.
- தெருக்குத்து இருந்தால் வடகிழக்கு, தென்கிழக்கு ஆகியவை உச்சப் பகுதிகளில் மட்டுமே இருத்தல் வேண்டும். தென்கிழக்கு, தென்மேற்கு ஆகியவை நீச்சப் பகுதிகளில் வருவதை தவிர்க்கவும்.
- மனை நீள் சதுரம் அல்லது சதுரமாக இருத்தல் வேண்டும். வேறு அமைப்புக்கள் கூடாது. மேலும் அகல நீளங்களின் விகிதம் 1: 2 க்கு மிகக் கூடாது.
- மனையின் தென்மேற்கு மூலை, மூலை மட்டத்திற்குச் சரியாக இருத்தல் வேண்டும்.
- மனையின் வடகிழக்கில் மட்டும் வளர்ச்சி இருக்கலாம். வேறு மூலைகளில் வளர்ச்சி இருத்தல் கூடாது.
- மனையின் எந்தத் திசையிலும் வெட்டு இருத்தல் கூடாது. வடகிழக்கில் கூடவே கூடாது.
- மனை தென்மேற்கிலிருந்து வடகிழக்கிற்குச் சரிவாக இருத்தல் வேண்டும். மழைநீர் வட கிழக்கில் மட்டுமே வெளியேற வேண்டும்.
- மதில் சுவர்கள் தெற்கு மற்றும் மேற்கு உயரமாகவும், வடக்கு மற்றும் கிழக்கு சற்று உயரம் குறைவாகவும் இருத்தல் வேண்டும்.
- மதில் சுவரின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு மூலைகளில் வெட்டோ , வளைவோ இருக்க கூடாது.
- மதில் வாயில்கள் வட கிழக்கில் இருத்தல் வேண்டும். தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆகியவை நீச்சப் பகுதிகளில் இருத்தல் கூடாது.
- கிணறு, ஆழ்துளைக் கிணறு, நிலத்தடி நீர்த்தொட்டி, நீச்சல் குளம் ஆகியன மனையின் வடகிழக்கு, வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளிலேயே இருத்தல் வேண்டும்.
- மேலும் மனையின் தென்மேற்கு, வடகிழக்கு மூலைகளை இணைக்கும் பாதையிலும், வீடு மற்றும் மனையின் வடகிழக்கு மூலைகளை இணைக்கும் பாதையிலும் இருத்தல் கூடாது.
- மதில் மற்றும் வீட்டை ஒட்டியும் இருத்தல் கூடாது. மேலும் வாயில்களுக்கு நேர் எதிரிலும் இருத்தல் கூடாது.82205-44911