பூரட்டாதி நட்சத்திர குணாதிசியங்கள்!!
பூரட்டாதி :
பூரட்டாதி நட்சத்திரத்தின் இராசி : கும்பம் மற்றும் மீனம்
பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி : ராகு
பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பாதத்தின் இராசி அதிபதி (கும்பம்) : சனி
பூரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தின் இராசி அதிபதி (மீனம்): குரு
பொதுவான குணங்கள் :
- அழகான மற்றும் சாதுரியமான பேச்சுகளால் அனைவரையும் கவரக்கூடியவர்கள்.
- எதிர்கால திட்டங்களில் மிகுந்த கவனம் கொண்டவர்கள்.
- எதிர்கால தேவைகளுக்கான சேமிப்பில் விருப்பம் உள்ளவர்கள்.
- வெற்றிக்காக கடுமையாக போராடக்கூடியவர்கள்.
- எண்ணிய செயலை முடிக்கும் வரை ஓயாதவர்கள்.
- வசைச் சொற்களை பொறுக்கமாட்டார்கள்.
- வாதம் செய்வதில் வல்லவர்கள்.
- கல்வி வேள்வியில் ஞானம் உள்ளவர்கள்.
- எழில் உடையவர்கள்.
- ஆன்மிக ஈடுபாட்டில் விருப்பம் கொண்டவர்கள்.
- பிறரின் மனதில் உள்ளதை அறிந்து செயல்படக்கூடியவர்கள்.
- வலிமையான மனமும், உடலும் உடையவர்கள்.
- மனைவியிடம் அதிக அன்பு கொண்டவர்கள்.
- எளிதில் எல்லோரிடமும் பழகக்கூடியவர்கள்.
- செய்தொழிலில் மிகுந்த ஈடுபாடுடன் செயல்படக் கூடியவர்கள்.
பூரட்டாதி முதல் பாதம் :
இவர்களிடம் பூரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- இறை வழிபாட்டில் விருப்பம் உடையவர்கள்.
- வலிமை உடையவர்கள்.
- போட்டிகளில் ஈடுபாடு உடையவர்கள்.
- நல்ல எண்ணங்கள் உடையவர்கள்.
- சௌபாக்கியம் உடையவர்கள்.
- குடும்பத்தின் மீது பற்று கொண்டவர்கள்.
பூரட்டாதி இரண்டாம் பாதம் :
இவர்களிடம் பூரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- யாருக்காகவும் பொய் உரைக்காதவர்கள்.
- உணர்ச்சிகள் அதிகம் உடையவர்கள்.
- மதிப்புகள் உடையவர்கள்.
- மக்களால் விரும்பப்படக்கூடியவர்கள்.
- எடுத்த செயலை முடிப்பதற்காக எல்லா வித முயற்சிகளிலும் ஈடுபடக்கூடியவர்கள்.
பூரட்டாதி மூன்றாம் பாதம் :
இவர்களிடம் பூரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- எப்போதும் புன்சிரிப்பு உடையவர்கள்.
- அறவழியில் நடப்பவர்கள்.
- கற்பனையில் வல்லவர்கள்.
- போஜனத்தில் அலாதி நாட்டம் உடையவர்கள்.
- பொருள் சேர்ப்பதில் நாட்டம் உடையவர்கள்.
பூரட்டாதி நான்காம் பாதம் :
இவர்களிடம் பூரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- நல்ல பண்புகளை கொண்டவர்கள்.
- மெய் பேசக்கூடியவர்கள்.
- நம்பிக்கைக்கு உரியவர்கள்.
- பிறருக்கு உதவுவதில் வல்லவர்கள்.
- தொழிலில் நாட்டம் கொண்டவர்கள்.