வாஸ்து நாளில் பூமி பூஜை போடலாமா?
கடந்த ஒரு வருடத்தில் மட்டுமே இந்த கேள்வியை என்னியிடம் ஓராயிரம் பேர் கேட்டிருப்பர்கள் அவர்களுக்கு அந்த நேரத்தில் பதில் கூறியிருந்தாலும் எல்லோருக்கும் பயன்படும் விதமாக இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
கேள்வி: வாஸ்து நாளில் அஷ்டமி வருது. நாள் சரியில்லை. எமகண்ட நேரமாக வருகிறது. ராகு காலம் வருது. திதி தவறா இருக்கே, மாதமும் தவற இருக்கே சார் என்றும் அப்புறம் பூமி பூஜை போட சரியான நாள் தான் எது சார் ?
பதில்: என்னுடைய அனுபவத்தில் வாஸ்து நாளில் பூமி பூஜை போட்ட 10 ல் 8 கட்டிடங்கள் கட்டி முடிக்க முடியாமல் ஏதே ஒருபிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதேபோல் குடும்பத்தில் பல பிரச்சனை நிலவுகிறது.வாஸ்து நாளில் பூமி பூஜை போட்ட இடம் கட்டிடம் எதுமே வால்து விதிமுறைக்கு கூட ஒத்து வராத இடமாக இருப்பதையும் நான் கண்டுள்ளேன்.
இதற்கு காரணங்கள்
- காலண்டரில் போட்ட விசியங்கள் அனைத்தும் சரி என்று நம்மளே முடிவு எடுப்பது
- அனுபவ பட்டவரியின் யாருடைய யோசனைகளையும் கேட்டுக் கொள்ளாதது
- கொத்தனார், எஞ்னியர் மற்றும் நண்பர்கள் யாரோ ஒருவர் சொல்வதை கேட்டு அந்த நாளில் பூஜை போடுவது பூமி பூஜை போட நல்ல நாள் அல்ல.
நல்ல வளர் பிறையில் வரக்கூடிய,
நல்ல நட்சத்திரம்
நல்ல திதி
நல்ல கரணம்
நல்ல யோகம்
நல்ல கிழமை
நல்ல மாதம்
இவைகள் மாதம் ஒன்று அல்லது இரண்டு நாட்களே வருடம் ஏழு எட்டு நாட்கள் மட்டுமே மிக உன்னதமான நாட்களாக வரும் அதுவே மிக சிறப்பான நாள்.
வாஸ்து நாள் தவறா சரியா என்கிற ஆராய்ச்சியும் எனக்கு இல்லை இவைகள் என்னுடைய அனுபவமே . 82205-44911