வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை விதிகள்

வாஸ்து   சாஸ்திரத்தின்   அடிப்படை விதிகள்

நான் கடந்த 10 வருடங்களில் வாஸ்துவில் அனுபவப்பட்ட விஷயங்களையும் கண்டு உணர்ந்த விஷயங்களையும் அடிப்படை விதிகளாய்வடிவமைத்து உள்ளேன். இவை எல்லோருக்கும் எளிதில் பயன்படுத்தும் விதமாக அமைத்துள்ளோம்.

  1. நீங்கள் வாங்க கூடிய இடமோ, காலி மனையையோ அல்லது வீடோ எதுவானாலும் சதுரமாகவும் செவ்வகமாகவும் மட்டுமே இருக்க வேண்டும்.
  2. காலி மனையை பொறுத்தவரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு சற்று தாழ்வாகவும் இருக்க வேண்டும்.
  3. வீட்டின் உள் அமைப்பை பொறுத்தவரை வடகிழக்கு வரவேற்பறை யாகவும் தென்கிழக்கு சமையலறையாகவும் தென்மேற்கு மாஸ்டர் பெட்ரூம் ஆகவும் வடமேற்கு கழிவறை ஆகும் அமைத்துக் கொள்ள வேண்டும்.பூஜையறையை பொறுத்தவரை தென்கிழக்கு, தெற்கு நடுபகுதி, வடமேற்கு,மேற்கு நடுப்பகுதி இந்த பகுதிகளில் அமைத்துக் கொள்ளலாம்.
  4. கழிவறையை பொருத்தவரை வீட்டின் மேற்கு நடுப்பகுதி மற்றும் வீட்டின் வடமேற்கு பகுதியில் அமைத்துக்கொள்ளலாம்.
  5. கழிவறைகுழி வீட்டின் மொத்த அமைப்பில் வடமேற்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். 
  6. மாடிப்படியை பொறுத்தவரை வீட்டின் உட்பகுதியில் தெற்கு  நடுப்பகுதி , மேற்கு நடுப்பகுதியில் மட்டும் வரவேண்டும்.வெளிப்புறத்தில் தென்கிழக்கு ,தென்மேற்கு வடமேற்கு ஆகிய மூன்று பகுதியிலும் திறந்தவெளி முறையில் வரவேண்டும் .
  7. வீட்டிற்கு நான்கு புறமும் காம்பவுண்டு மிக மிக அவசியம். தெற்குப் பகுதியும் மேற்கு பகுதியும் குறைவான இடைவெளியில் காம்பவுண்ட் வரவேண்டும். 
  8. வடக்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் நிறைய இடை வெளியில் காம்பவுண்ட்  வரவேண்டும்.
  9. போர், கிணறு, தரைக்கு கீழ் தண்ணீர் தொட்டி போன்றவைகள் வடகிழக்கு பகுதியில் மட்டுமே வர வேண்டும்.
  10. தரைக்கு மேல் தண்ணீர் தொட்டி அமைப்பு என்பது வீட்டின் மொத்த அமைப்பின் தென்மேற்கு பகுதியில் மட்டுமே வர வேண்டும்,
  11. கார் செட் அமைப்பானது வீட்டின் தென் கிழக்குப் பகுதியிலும், வட மேற்குப் பகுதியிலும் எந்த ஒரு மூலையிலும் மூடாமல் வரவேண்டும்.
  12. போர்டிகோ பொருத்தவரை வீட்டின் நான்கு பகுதிகளிலும் அமைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு  மூலையும் வெட்டாமல் அமைத்துக் கொள்ள வேண்டும்.போர்டிகோவீட்டின் மேற்கூரை அளவில் சமதளமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.
  13. வீட்டின் உட்பகுதியில் தரை தளமும் வீட்டின் மேற்கூரையின் தளமும் இரண்டும் சமமாக இருக்க வேண்டும்.
  14. அனைத்து வாசல்களும், ஜன்னல்களும் உச்சப்பகுதியில் மட்டுமே வர வேண்டும்.
  15. தெருக்குத்து ,தெருபார்வை உச்ச பகுதியில் வருவது சிறப்பு.

நான் கூறிய இந்த அடிப்படை விதிகளை  மீறி கட்டிடம் அமைக்கும் பட்சத்தில் கடுமையான விளைவுகளையே உறுதியாக ஏற்படுத்தும் . 82205-44911