தெற்கு திசையின் வீட்டமைப்பால் தான் பணப் பிரச்சனை ஏற்படுகின்றதா

தெற்கு திசையின் வீட்டமைப்பால் தான் பணப் பிரச்சனை ஏற்படுகின்றதா?

கேள்வி : சார், நாங்கள் தெற்கு திசை பார்த்த வீட்டில் குடியிருக்கிறோம். பண கஷ்டம் மற்றும் பல கஷ்டங்கள் வந்த வண்ணம் உள்ளது. இதற்கு ஏதாவது பரிகாரம் கூறுங்கள்.

பதில் : தெற்கு பார்த்த வீட்டை உருவாக்குவதற்கு அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணர்களால் மட்டுமே முடியும். அனுபவம் இல்லாத நபர்கள் தெற்கு திசை பார்த்த வீட்டை உருவாக்கும்போது நான் இங்கு குறிப்பிடும்படியான பல தவறுகள் வர வாய்ப்புண்டு.

தெற்கு திசை வீடும் வாஸ்து குறைகளும் !!

1. வடக்கு குறைவான இடமாகவும், தெற்கு அதிக காலி இடத்தையும் ஏற்படுத்தி வீட்டை அமைப்பார்கள்.

2. தெற்கு பகுதியில் போர்டிக்கோவை கீழே இறக்கி போட்டு விடுவார்கள்.

3. தெற்கு பகுதியில் வாசல்கள் பல நேரங்களில் நீச்ச வாசலாக மாறிவிடுகிறது.

4. செப்டிக்டேங்கை தென்கிழக்கில் அமைத்து விடுகிறார்கள்.

5. தண்ணீர்தொட்டி, போர், கிணறு ஆகியவைகளை வடகிழக்கிற்கு பதில் தென்கிழக்கிலோ அல்லது தென்மேற்கிலோ அமைத்துக்கொள்வது.

6. கார் பார்கிங்கிற்காக தரையை வீட்டை விட தாழ்வாகவோ அமைத்துக்கொள்வது.

7. மாடிபடியை தென்மேற்கில் அமைக்கும்போது மூடிய படி அமைப்பாகவோ அல்லது பில்லருடன் கூடிய படி அமைப்பாகவோ இருப்பது.

8. கார் பார்க்கிங்கிற்காக முக்கிய கேட்டை தென்மேற்கில் அமைத்துக் கொள்வது.

9. வீட்டின் முக்கிய வாசல் தென்கிழக்கில் வருகிறது என்பதற்காக சமையலறையை மொத்த வீட்டின் அமைப்பில் வடகிழக்கிலேயோ அல்லது தென்மேற்கிலேயோ அமைப்பது.

10. தெற்கு பார்த்த வீட்டிற்கு வரவேற்பறையை மொத்த வீட்டின் அமைப்பில் தென்மேற்கில் அமைத்துக்கொள்வது.

11. தெற்கு பகுதியில் காம்பவுண்ட் இல்லாமல் இருப்பது.

நான் இங்கு குறிப்பிட்ட இந்த தவறுகள் உங்களுடைய வீட்டின் அமைப்பில் இருக்குமானால் கண்டிப்பாக கடன் மட்டுமல்லாது பல பல எண்ணிலடங்கா பிரச்சனைகள் வரக்கூடும்.

வாஸ்து சாஸ்திரத்தில் பரிகாரம் என்பது கிடையாது. உங்களது வீடு சரியாகவோ, தவறாகவோ உருவாக்கப்பட்டால் அதற்கான சூழ்நிலை மற்றும் பலன் வாழ்நாள் முழுவதும் கொடுத்துகொண்டே இருக்கும்.
 82205-44911