அஸ்த நட்சத்திர குணாதிசியங்கள்

                                                                  அஸ்த நட்சத்திர குணாதிசியங்கள் !!

அஸ்தம்:

அஸ்தம் நட்சத்திரத்தின் இராசி : கன்னி
அஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன்
அஸ்தம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : புதன்

பொதுவான குணங்கள் :

  1. நல்ல பேச்சுத்திறமை உடையவர்கள்.
  2. சுறுசுறுப்பான செயல்களால் எண்ணிய செயலை முடிப்பீர்கள்.
  3. சேமிப்பில் விருப்பம் உடையவர்கள்.
  4. சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவர்கள்.
  5. மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் சாமர்த்தியசாலிகள்.
  6. கல்வியில் விருப்பம் கொண்டவர்கள்.
  7. குறைவாக புசிப்பவர்கள்.
  8. அழகான உடல் தோற்றம் கொண்டவர்கள்.
  9. செயலை முடிப்பதில் புத்திசாலிகள்.
  10. குருபக்தி கொண்டவர்கள்.
  11. மனத்திற்கு பிடித்தால் மட்டும் எதையும் செய்யக் கூடியவர்கள்.
  12. ஆடை மற்றும் ஆபரணங்கள் மீது விருப்பம் உடையவர்கள்.
  13. நாட்டியம், சங்கீதம் போன்ற கலைகளை ரசிப்பதில் வல்லவர்கள்.
  14. எளிதில் பழகும் இயல்புடையவர்கள்.
  15. தாயாரின் மீது மிகுந்த அன்பு உடையவர்கள்.

 

அஸ்தம் முதல் பாதம் :
இவர்களிடம் அஸ்த நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. பசுக்கள் மீது பிரியமுள்ளவர்கள்.
  2. நேர்மையானவர்கள்.
  3. வெளிப்படையாகப் பேசும் இயல்புடையவர்கள்.
  4. எளிமையான தோற்றம் உடையவர்கள்.
  5. இலட்சியத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.

அஸ்தம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் அஸ்த நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. நடனத்தில் விருப்பமுள்ளவர்கள்.
  2. சுக போகங்களில் ஈடுபாடு கொண்டவர்கள்.
  3. விரைவாக பேசும் ஆற்றல் கொண்டவர்கள்.
  4. உலக நியதிகளுக்கு கட்டுபட்டு வாழக்கூடியவர்கள்.

அஸ்தம் மூன்றாம் பாதம் :

இவர்களிடம் அஸ்த நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. இறை பக்தி கொண்டவர்கள்.
  2. நல்லகுணமும் உடையவர்கள்.
  3. அறிவு வேட்கை கொண்டவர்கள்.
  4. நிதானமான பேச்சுத்திறமை உடையவர்கள்
  5. தொழில் வல்லமை உடையவர்கள்.
  6. கல்வியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள்.

அஸ்தம் நான்காம் பாதம் :

இவர்களிடம் அஸ்த நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. விருப்பம் போல் வாழக்கூடியவர்கள்.
  2. இனிய குரலை உடையவர்கள்.
  3. தாயை பேணி காப்பவர்கள்.
  4. விட்டுக்கொடுத்து வாழக்கூடியவர்கள்.